உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார் குண்டு வெடிப்பில் கைதானவர்களின் உறவினர்கள் சிறை முன் ஆர்ப்பாட்டம்

கார் குண்டு வெடிப்பில் கைதானவர்களின் உறவினர்கள் சிறை முன் ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, சிறையில் உள்ளவர்களை பார்க்க அனுமதிக்காததால் உறவினர்கள் கோவை மத்திய சிறை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த 2022ம் ஆண்டு அக்., 23ம் தேதி காரில் குண்டு வெடித்தது. இதில், காரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் பலியானார். குண்டு வெடிப்பு தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி மேலும் எட்டு பேரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம், மூவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது வரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கோவை மற்றும் சென்னை புழல் சிறைகளில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அபு ஹனிபா, சரண் மாரியப்பன், பவாஸ் ரகுமான் ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது ரியாஸ், அப்சர் கான் ஆகியோரை சந்திக்க அவர்களின் உறவினர்கள் சென்றபோது, சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால், அவர்கள் கோவை மத்திய சிறை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில்,'' கடந்த மூன்று மாதங்களாக இருவரையும் சந்திக்கவிடாமல் அதிகாரிகள் தடுக்கின்றனர். அவர்களுக்கு சரியாக உணவு கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர். சிறையில் சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும்,'' என்றனர்.சிறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ''வழக்கமாக கைதிகளின் தங்கும் இடம், கைதிகள் வைத்திருக்கும் பொருட்கள் உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்வது வழக்கம். அதற்கு, முகம்மது ரியாஸ், அப்சர் கான் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ''இதனால் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு சில சலுகைகள் அவர்கள் இருவருக்கும் வழங்கப்படவில்லை. மேலும், பேச்சுவார்த்தைக்கு பிறகு உறவினர்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

என்றும் இந்தியன்
நவ 15, 2024 16:29

சே இதுக்குத்தான் எவ்வளவு தடவை நான் சொல்வது "தவறு கண்டேன், அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கு அனுப்பி வையுங்கள் 72 கன்னிகைகள் அங்கு இவர்களை வரவேற்று களிப்பூட்ட" ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று


Ganesun Iyer
நவ 15, 2024 11:38

கவலைபடாதீர்கள், அறிவாலய ஆட்சியில் உங்களின் ஓட்டுக்கு கட்டாயம் நன்றி செலுத்துப்படும்..


பேசும் தமிழன்
நவ 14, 2024 19:41

விடியல் ஆட்சியில் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று தானே இப்படி நடந்து கொள்கிறார்கள்


ManiK
நவ 14, 2024 17:54

இப்போல்லாம் திரும்பின பக்கமெல்லாம் இந்த உடை தான். என்னத்த சோல்ல...ஆனா உடை விஷயத்தில் அவங்க ஒற்றுமையையும் தைரியத்தையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.


என்றும் இந்தியன்
நவ 15, 2024 16:35

வேடிக்கை வென்றால் 2017லீலியே இராக்கில் புர்கா தடை செய்யப்பட்டுள்ளது???இப்போ புதுசா பெண்குழந்தைகள் 9 வயது என்றால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் இராக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது முஹம்மது 6 வயது ஆயிஷாவை திருமணம் செய்தார் 9 வயதில் பெண் மேஜர் ஆனதும் உறவுகொண்டார் என்று ஹடித்தில் இருக்கின்றதே மிக மிக விளக்கமாக அந்த காப்பி பேஸ்ட்


ஆரூர் ரங்
நவ 14, 2024 17:44

என்ன வேணும்னாலும் பண்ணுங்க திமுக அரசு உங்களை தொடாது ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு கிரிமினல்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி கொடுத்து ஓராண்டு ஜெயில் தண்டனை பெற்ற ஜவாஹிருல்லா அவங்க கூட்டணியில்தான் எம்எல்ஏவாக இருக்கிறார். அப்புறமென்ன?


Sridhar
நவ 14, 2024 12:17

அப்பா அப்பா யப்பப்பா என்ன ஒரு சமூக பாசம் சிறையில் இருக்கும் ஆளுங்க தீவிரவாதியா இருந்தாலும் தேசவிரோதிகளா இருந்தாலும், அவுங்க நம்ம வுட்டு பில்லிங்கோ அதுனால எதைப்பத்தியும் கவலையில்லை. உள்ள இருக்கறவங்களும் சிறை நிர்வாகத்தோடு ஒத்துழைக்காம இருக்கறத பாத்தால், வெளியே வந்தவுடன் பெரிய சம்பவம் காத்துருக்கும்போலவே இந்த மாதிரி ஆட்களை பேணி போசாக்க பாத்துக்கறவரை, நம்ம சட்டங்கள் நீதித்துறை மாண்பு இறையாண்மை எல்லாம் போற்றப்படும். நல்ல நாடு


M Ramachandran
நவ 14, 2024 11:57

மக்களுக்கு எதிராகா குண்டு வெடிப்பு நடத்துனவர்களுக்கு கூட்டம் ஊட்டிய சாதிக்க பார்த்தால் அவர்கலிய்ய சஹாரா பாலை வனத்திற்கு அனுப்பி விடுதல் உத்தமம்.


Barakat Ali
நவ 14, 2024 11:37

பெரும்பான்மை ஹிந்துக்களிடம் நாம் என்னதான் பாசமாக இருப்பது போல நடித்தாலும், அனைத்து அரசுகளும் நம்மிடம் ஒட்டுப் பிச்சைக்காக கால்பிடித்தாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை... இதை பெரும்பான்மை ஹிந்துக்கள் மவுனமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே ..... வயிறெரிந்து சபிக்க மாட்டார்களா என்ன? அல்லாஹ் அனைவருக்கும் பொதுவானவன்.. அனைத்தையும் கண்காணிப்பவன் .... .நீதி தவறாதவன் ..... அனைவருக்கும் நீதி வழங்குபவன் ....


பேசும் தமிழன்
நவ 14, 2024 19:37

என்ன சொல்ல வருகிறீர்கள்.....குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமா... கூடாதா ???


GMM
நவ 14, 2024 11:31

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கிளை சிறை, மத்திய சிறையை நகருக்கு சுமார் 180 கிலோ மீட்டர் வெளியே மக்கள் குடியிருப்பு, தொழிற்சாலை இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும். தற்போது உள்ள ஜெயில் இடத்தை மத்திய பாதுகாப்பு படைக்கு ஒதுக்க வேண்டும். உள் நாட்டு பாதுகாப்பு மாநில நிர்வாகம் கையில் இருப்பது, அரசியல் சூழலில் கடினமாகி வருகிறது. பல மாநிலங்களில் அரசியல், நிர்வாக, நீதியில் தேச ஒற்றுமை விரும்பாத அமைப்புகள் ஊடுருவி வருகின்றனர்.


கண்ணன்
நவ 14, 2024 11:13

பேசாமல் அவர்களையும் சிறையில் அடைத்துவிடலாம் எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை