உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மத நல்லிணக்கம்: தமிழிசை

 பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மத நல்லிணக்கம்: தமிழிசை

சென்னை: ''மதுரையை வஞ்சித்தது தி.மு.க., தான்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை கூறினார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மத நல்லிணக்கம் இருக்கிறதா என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கேட்கிறார். அப்படி மத நல்லிணக்கம் இருப்பதால் தான், பீஹார் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து பா.ஜ.,வுக்கு மக்கள் வாய்ப்பு தருகின்றனர். மத வேற்றுமையை ஏற்படுத்துவது தி.மு.க., தான். முதல்வர் ஸ்டாலின் உட்பட யாருமே ஹிந்து விழாக்களுக்கு வாழ்த்து கூறுவது இல்லை. திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றியது தி.மு.க., தான். நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் தான் இவ்வளவு பிரச்னை. மதுரைக்கு என்ன வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும் என முதல்வர் கூறுகிறார். ஆனால், 200 கோடி ரூபாய் ஊழலில் சிக்கி, மதுரை தி.மு.க., மேயர் பதவி இழந்துள்ளார். அசுத்தமான நகரம் என்ற பெயரை மதுரை வாங்கியுள்ளது. மதுரையை வஞ்சித்தது தி.மு.க., தான். இவ்வாறு தமிழிசை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை