உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குரூப் - 4 தேர்வு விண்ணப்ப பதிவு அவகாசம் நீட்டிக்க கோரிக்கை

குரூப் - 4 தேர்வு விண்ணப்ப பதிவு அவகாசம் நீட்டிக்க கோரிக்கை

சென்னை:தமிழக அரசு துறைகளில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 16 வகை, 'குரூப் - 4' பதவிகளில், 6,244 காலியிடங்களை நிரப்ப, ஜூன் 9ல், தேர்வு நடக்க உள்ளது.இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜனவரி, 30ல் துவங்கியது. பதிவுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கு, இன்னும் கூடுதல் நாட்கள் அவகாசம் வழங்குமாறு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை