உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடகா எல்லையில் 20 பசு மாடுகள் மீட்பு

கர்நாடகா எல்லையில் 20 பசு மாடுகள் மீட்பு

ஓசூர்:கர்நாடகா மாநில எல்லையான, ஆனைக்கல் அருகே ஹெப்பகோடி பகுதியில், சட்டவிரோதமாக பசுமாடுகளை லாரியில் ஏற்றி, இறைச்சிக்காக கேரளா கொண்டு செல்வதாக, ஹெப்பகோடி போலீசாருக்கு தகவல் சென்றது.அதன்படி, அப்பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற லாரியை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தபோது, 20 அமிர்த மகால் இன பசு மாடுகளை, சட்டவிரோதமாக லாரியில் ஏற்றி, இறைச்சிக்காக கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்தது.இதையடுத்து, பசுக்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை அப்பகுதியிலுள்ள பண்ணைக்கு அனுப்பி வைத்து, லாரி டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை