உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராட்வீலரை தொடர்ந்து சைபீரியன் ஹஸ்கி: சென்னையில் மற்றொரு நாய்க்கடி சம்பவம்

ராட்வீலரை தொடர்ந்து சைபீரியன் ஹஸ்கி: சென்னையில் மற்றொரு நாய்க்கடி சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ராட்வீலர் நாய் சிறுமியை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆலந்தூரில் 11 வயது சிறுவனை சைபீரியன் ஹஸ்கி என்ற ரக நாய் கடித்துள்ளது. இது குறித்து நாய் உரிமையாளர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுமியை கடித்த 2 நாய்களையும் 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து அந்த நாய்கள் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.இந்த சம்பவம் நடந்து இரண்டே நாளில் மற்றுமொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. ஆலந்துார் போலீஸ் குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த அஸ்வந்த் (வயது 11) என்ற சிறுவனை சைபீரியன் ஹஸ்கி வகை நாய் கடித்துள்ளது. இது குறித்து நாய் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தேசியன்
மே 09, 2024 08:46

அது என்ன, நாயை இடமாற்றம் செய்தால் அதன் மூர்க்க குணம் மாறிடுமா? மனித உயிர்களை விட, இவற்றிற்கு ஏன் இவ்வளவு சட்டபாதுகாப்பு. தற்காப்புக்காக கொலையைக்கூட ஆதரிக்கும் சட்டம், பாதிப்பை ஏற்படுத்திய நாய்க்கும் அதன் உரிமையாளர்க்கும் அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். நாய் மீது கொலை வழக்கு பதிவு செய்து நாய்க்கு மரண தண்டனை தர வேண்டும். நாய் திருடனை தவிர மற்றவர்களை தாக்கினாலே அது நாய் செய்த கொலையாக பார்க்க வேண்டும்


lana
மே 09, 2024 08:02

இதுக்கும் எங்க வரிப்பணம் வீணாகும் படி மாநகராட்சி செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது என்ன ஒரு நாய் கடித்து செலவை ஏற்கும் மா நரகம் இதை ஏற்க மறுக்க முடியாது. தேவை பட்டால் நாய் owner நீதிமன்றம் செல்ல வேண்டும்.


NACHI
மே 09, 2024 02:45

வெயிலுக்கு தாக்கு பிடிக்கல்லை


தாமரை மலர்கிறது
மே 09, 2024 02:14

மைனஸ் நாற்பது டிகிரியில் வாழும் ஒரு உயிரை பிளஸ் நாற்பது டிகிரியில் வைத்தால், கடிக்காமல் என்ன செய்யும்?


R Kay
மே 09, 2024 00:40

பணச்செருக்கு பந்தா காண்பிக்க மற்றவரை பயமுறுத்தும் இது போன்ற நடவடிக்கையை தடுக்க வேண்டும்


Ramesh Sargam
மே 08, 2024 20:59

சோத்துக்கே வழியில்லாதவர்கள் கூட இந்நாட்களில் ஒரு show -வுக்காக நாய் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்


Vijay D Ratnam
மே 08, 2024 20:57

மாநகரில் நாய் வளர்ப்போர் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூபாய் செலுத்தவேண்டும், நகரத்தில் நாய் வளர்ப்போர் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூபாய் செலுத்தவேண்டும் ஊராட்சி கிராமங்களில் நாய் வளர்ப்போர் ரூபாய் ஆண்டுக்கு ரூபாய் செலுத்தவேண்டும் என்று அரசு அறிவிக்கவேண்டும் பொறவு இதுக்கெல்லாம் கோட்டா கிடையாது எல்லா நாய் வளர்ப்போருக்கு கட்டணம் செலுத்தியாக வேண்டும் மற்றபடி தெருவில் திரியும் தெருநாய்களை முண்டந்துறை புலிகள் காப்பகம், பண்டிப்பூர் சிங்கம் சரணாலயம் மற்றும் முதலைப்பண்ணைகள் மிருகக்காட்சி சாலைகளுக்கு உணவுக்காக அனுப்பலாம்


Arumugam Saravanan
மே 08, 2024 20:54

நாட்டு நாய் கள் வளர்க்க வேண்டும்


தேவராஜ்
மே 08, 2024 19:44

இவையெல்லாம்.குளிர்பிரதேச நாய்கள். இங்கே வெயில் தலைக்கேறி வெறிபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.


Senthoora
மே 08, 2024 21:21

உண்மை, குளிர் தான் வேண்டும், மிக அமைதியான பிராணி ஹஸ்கி இனம் இராணுவத்தில், போலீசில் கடமை செய்கிறது நுகர்வத்தில் கெட்டிக்கார பிராணி அதை சீண்டி இருப்பாங்க அதன் அதுக்கு வன்மம் vanthirukkum


sridhar
மே 08, 2024 19:16

தமிழகம் மற்றும் கேரளாவில் நாய்கள் தொல்லை ரொம்ப அதிகம் ஆட்சியாளர்கள் மற்றும் பணக்கார அரசியல்வாதிகள் யாரும் சாலைகளில் நடந்து போவதில்லை என்பதால் சாதாரண மக்கள் கஷ்டம் அவர்களுக்கு புரியாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை