உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சார வாகனங்களுக்கு லோகோ உருவாக்க ரூ.1 லட்சம் பரிசு

மின்சார வாகனங்களுக்கு லோகோ உருவாக்க ரூ.1 லட்சம் பரிசு

சென்னை:மின் வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த, 'லோகோ' எனப்படும் அடையாளத்தை வடிவமைக்க, 'மாநில மின் வாகன திட்டத்தின் பிராண்டிங்' போட்டியை, தமிழக பசுமை எரிசக்தி கழகம், ஐ.டி.டி.பி., இந்தியா மற்றும், 'மெட்ராஸ்டார்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளன. தமிழகத்தில் மின் வாகனங்கள் தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், 'சார்ஜிங் மையம்' அமைப்பது உள்ளிட்ட பணிகளை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் மேற்கொள்கிறது. தற்போது, தமிழகத்தில் மின் வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த, 'லோகோ' எனப்படும் அடையாளத்தை வடிவமைக்க, 'மாநில மின் வாகன திட்டத்தின் பிராண்டிங்' போட்டியை, தமிழக பசுமை எரிசக்தி கழகம், ஐ.டி.டி.பி., இந்தியா மற்றும், 'மெட்ராஸ்டார்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளன. இதில் மக்கள், மாணவர்கள், சுய தொழில் செய்வோர், படைப்பாற்றல் உடைய நிறுவனங்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறும் வடிவமைப்பு, அதிகாரப்பூர்வ 'பிராண்டிங் மற்றும் லோகோ'வாக தேர்வு செய்யப்படும். இப்போட்டிக்கான பதிவு கட்டணம் இலவசம். சிறந்த பிராண்டிங்கை உருவாக்குவோருக்கு முதல் பரிசாக, 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக, 30,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக, 20,000 ரூபாயும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம், 22ம் தேதி கடைசி நாள். போட்டியின் முடிவுகள் செப்., 4ம் தேதி அறிவிக்கப் படும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை, பசுமை எரிசக்தி கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி