வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது திராவிட கட்சிகளுக்கு உள்ள பிரச்சனை
அண்ணாமலே கட்சி ஆரம்பிச்சி நீ அதிலே சேந்திட்டியா?
மலேஷியாவுக்கு தப்பித்து சென்றால் மட்டும் விட்டுவிடுவோமா. அங்கேயே பிடித்து தப்புவோம்.
அவர் சகோதரி தானே இது சுமுகமா முடிக்கப்படும்
சென்னை: சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா என்பவரை, மலேஷியா தப்ப முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19 வது வார்டு கவுன்சிலராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.இவர் நிறுவனங்களில் முதலீடு செய்தால், பங்கு தருவதாக கூறி,தனது கணவர் சொத்துகளை அடமானம் வைத்து ரூ.17 கோடி மோசடி செய்தார் சகோதரி பொன்னரசி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், மலேஷியா தப்ப முயன்ற ராஜாவை, போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இது திராவிட கட்சிகளுக்கு உள்ள பிரச்சனை
அண்ணாமலே கட்சி ஆரம்பிச்சி நீ அதிலே சேந்திட்டியா?
மலேஷியாவுக்கு தப்பித்து சென்றால் மட்டும் விட்டுவிடுவோமா. அங்கேயே பிடித்து தப்புவோம்.
அவர் சகோதரி தானே இது சுமுகமா முடிக்கப்படும்