உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்துக் கார்டுகளுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு!

அனைத்துக் கார்டுகளுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய கார்டுதாரர்கள் அனைவருக்கும், தலா, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.நான்கு லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள் உட்பட வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் என, 24 லட்சம் கார்டுதாரருக்கு பரிசு தொகுப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=99h0j266&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாளை துவக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை(ஜன.,10) காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்