உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குருவிகள் மட்டுமே பிடிபடும் மர்மம் என்ன: கேட்கிறார் இ.பி.எஸ்.,

குருவிகள் மட்டுமே பிடிபடும் மர்மம் என்ன: கேட்கிறார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் மத்திய, மாநில போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ Pseudoephedrine என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற செய்தி வெளி வந்துள்ளது. போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டு உள்ளதற்கு காரண கர்த்தாக்கள் யார் ? சூத்திரதாரிகள் யார்-யார் ? என்பது நன்கு தெரிந்திருந்தும், ஆணிவேர் எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தும், அவர்கள் மீது சட்டத்தின் இரும்புப்பிடி நீளாமல், கடத்தலில் ஈடுபடும், குருவிகள் என்றழைக்கப்படும், சிறு, சிறு கடத்தல் வேலை செய்யும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன?தொடர்ந்து இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல், விற்பனை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

SUBBIAH RAMASAMY
செப் 27, 2024 21:59

இவரு இப்பதான் தூக்கத்தில் இருந்து முளிச்சி இருக்காரு போல ??


Ramesh Sargam
செப் 27, 2024 20:14

எப்பொழுதுமே அப்படித்தான். செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைக்கு சென்று நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அது ஒரு சிறு குருவி. அவரைவிட பெரிய பருந்துகள் இன்னும் பிடிபடவில்லை. பிடிபடமாட்டார்கள். நமது சட்டம் அப்படி இருக்கிறது. ஆகையால்தான் சட்டம் ஒரு இருட்டறை என்று நாம் கூறுகிறோம்.


D.Ambujavalli
செப் 27, 2024 18:41

கோடிகளில் படியளக்கும் வள்ளல்களை எந்த அரசு பிடிக்கும்? காட்டிக்கொடுக்கும் ? குருவிகள் பிடிபடும், கழுகுகள், வல்லூறுகள் ‘சிவன் தலை பாம்புகளாக’ கோலோச்சும் போலீசுக்கும் எல்லை வகுக்கப்பட்டிருக்கிறதே


raja
செப் 27, 2024 18:32

அதாவது ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட கடத்தல் தலைவனை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்...


கத்தரிக்காய் வியாபாரி
செப் 27, 2024 16:12

சரியாக கேட்கிறார்...பதில் சொல்லுங்க உலகம் சுற்றும் முதல்வர்


அப்புசாமி
செப் 27, 2024 16:01

முதல்ல இந்தக் குருவிகளை சுட்டுத்தள்ளணும். அப்புறமா குருவி ஓனரை புடிக்கலாம். முதல்la கூரை ஏறி குருவியப் புடிங்க.


Balasubramaniam
செப் 27, 2024 15:33

உண்மை தான்


RAMKUMAR
செப் 27, 2024 15:26

குருவிகரன் சீக்கிரம் மாட்டுவான் . கவலைப்படவேண்டாம் .


மோகனசுந்தரம்
செப் 27, 2024 14:59

இவனையும் ஒரு மனிதன் என்று பேட்டி எடுக்கிறார்கள். வெட்கம் வெட்கம் வெட்கம்.


Mettai* Tamil
செப் 27, 2024 15:58

இந்த வெட்கத்தை கஞ்சா கடத்துறவங்க கிட்ட காமிங்க ...உங்களுக்கென்ன ரூ 200 வந்தால் போதும் ....


GMM
செப் 27, 2024 14:43

ஒரு சிலரை மட்டும் மத்திய புலனாய்வு பிடிக்கிறதாம். எடக்கு பாடி கண்டுபிடிப்பு. மாநில ஸ்காட்லாண்ட் கவுன்சிலர் முதல் முதல்வர், முக்கிய அரசியல் வாதிகள் வரை பாதுகாக்க மட்டும். பின் மாநில போலீஸார் சிறு குற்றம் தான் அறிய முடியும். மாநில பணியை தேச நலம் கருதி மத்திய அமைப்புகள் செய்து வருகின்றன . அரசியல் வாதிகள் ஊழல் குற்றம் தடுக்க உச்ச நீதிமன்றம் தடையாக உள்ளது. ?அண்ணா திமுக அறியாத பருந்தும் குருவியும் உண்டா ? மாநிலங்களுக்கு வக்கீல் வாதம் மூலம் செயற்கை அதிகாரம் கொடுத்து வருகின்றனர் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை