உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் பணியாளர்களுக்கு ரூ.3,000 கருணை கொடை

கோவில் பணியாளர்களுக்கு ரூ.3,000 கருணை கொடை

சென்னை:கோவில் பணியாளர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் கருணைக்கொடை வழங்க, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் முரளீதரன், அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க, கடந்த 5ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட, அனைத்து கோவில் பணியாளர்களுக்கும், பொங்கல் கருணைக்கொடையாக, 3,000 ரூபாய் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.பொங்கல் கருணைக்கொடை 3,000 ரூபாய் பெற, கோவில் பணியாளர்கள், 2022 - 23ம் ஆண்டில், 240 நாட்கள் மற்றும் அதற்கு மேலாக பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால், 240 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்தோருக்கு, அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில், இத்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்