உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுலா விசாவில் வந்த ரஷ்ய நடிகர்கள்: சூர்யா படப்பிடிப்பில் விதிமீறல் அம்பலம்

சுற்றுலா விசாவில் வந்த ரஷ்ய நடிகர்கள்: சூர்யா படப்பிடிப்பில் விதிமீறல் அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: நடிகர் சூர்யாவின் படப்பிடிப்பில், சுற்றுலா விசாவில் வந்த ரஷ்ய நடிகர்கள் கலந்து கொண்டது அம்பலம் ஆகியுள்ளது. இது பற்றி ஊட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26ம் தேதி முதல் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8krwfeba&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 ஊட்டியில் உள்ள 'நவாநகர் பேலஸ் ' என்ற இடத்தில் சண்டை காட்சிகள் படம் ஆக்கப்பட்டு வந்தது. கடந்த 8ம் தேதி சண்டை காட்சி நடந்த போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சூர்யா சென்னை கிளம்பிவிட்டார்.

சுற்றுலா விசா

இந்நிலையில், இந்த படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சேர்ந்த 155 பேர் கடந்த 27ம் தேதி சுற்றுலா விசாவை பெற்று வந்துள்ளனர். அவர்கள் ஊட்டியில் உள்ள, 3 பிரபல தனியார் ஓட்டல்களில் தங்கி படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர். பொதுவாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வந்து தங்கினால் தங்கும் விடுதி நிர்வாகத்தினர் இதுகுறித்து போலீஸ் நிலையம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், ரஷ்ய நாட்டினர் குறித்த விபரங்களை ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர்.கடந்த வாரம் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தபட்டது. இதனையடுத்து படப்பிடிப்பிற்காக வந்துள்ள, 155 ரஷ்யர்களில் 42 பேர் ரஷ்யா திரும்பி சென்றனர். தற்போது, 113 பேர் ஊட்டியிலேயே தங்கி உள்ள நிலையில் ரஷ்யா நாட்டினர் சுற்றுலா விசாவில் வந்து திரைப்படத்தில் நடிக்க கூடாது என்பதாலும் ரஷ்யா நாட்டினரின் விபரங்களை நீலகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு முறையாக தெரிவிக்காதது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு நீலகிரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் சம்பந்தபட்ட தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 17, 2024 15:01

வெளிநாட்டில் இருந்து நடிகர்கள் கூட இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் வந்து விட்டதா? எல்லாம் இந்த இலவசங்கள் செய்யும் சூழ்ச்சியா இல்லை டாஸ்மாக் நடிகர்கள் கூட தன்னகத்தே ஈர்த்து கொண்டதா?


அப்பாவி
ஆக 16, 2024 17:45

எல்லாம் காசை வாங்கிக்கிட்டு எந்த விதிமீறலும்.இல்லைன்னு ப்ளேன் ஏத்தி அனுப்பிருவாங்க. சூரி படத்துக்கு விளம்பரமும் கிடைச்சுரும்.


Azar Mufeen
ஆக 16, 2024 16:38

அகரம் மூலம் பல பேர்களை பட்டதாரியக்கிய சூர்யா எங்களுக்கு உசத்திதான்


தமிழ்வேள்
ஆக 16, 2024 21:36

கோமாளி.....அவன் உனக்கு உசத்தி என்றால் பாகிஸ்தானில் அவனுக்கு தர்கா கட்டு.. ஃபாத்திஹா ஓது....குர்பானி கொடு....ஒரு தேசத்துரோகம் சட்டவிரோத செயல்கள் செய்யும் கூத்தாடி பயலுக்கு முட்டு கொடுக்க வெட்கமாக இல்லை உனக்கு? கூத்தும் கூத்தாடிகளும் தற்போது ஹலால் ஆகிவிட்டதா உங்களுக்கு? .


அசோகன்
ஆக 16, 2024 12:34

அயோக்கிய திருட்டு பயல்...... இவனை நம்பி பலர் வீணாவது வேதனையான விஷயம்


Ramesh Sargam
ஆக 16, 2024 11:45

என்றைக்கு சூர்யா அந்த ஜோதிகாவின் வலையில் மயங்கி விழுந்தானோ அன்றையிலிருந்தே அவன் செயல்பாடுகள் சரியில்லை. அந்த ஜோதிகா ஏதோ சரியாக வசியம் வைத்துவிட்டால் சூர்யாவுக்கு.


RAMAKRISHNAN NATESAN
ஆக 16, 2024 11:39

அவமானம் .....


நயன்
ஆக 16, 2024 11:13

இவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் !!


Kumar Kumzi
ஆக 16, 2024 10:58

இவனை பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்


Anand
ஆக 16, 2024 10:53

இவனுங்க குடும்பம் யோக்கிய சிகாமணிகளாச்சே.....இதிலிருந்து தப்பிக்க ஒரு ஈஸியான வழி, உடனே மோடிக்கு எதிராக நாக்கு சுளுக்கும் அளவுக்கு ஒரு வீரவஜனம் பேசினால் போதும், எந்த விதிமீறலும் இல்லை என சர்டிபிகேட் தந்துவிடுவார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 16, 2024 10:47

நிச்சயமாக ஒரு நடவடிக்கையும் இருக்காது. இதற்கு முன்னரே இதே போல வெளி நாட்டவர்கள் டூரிஸ்ட விசாவில் சென்னை வந்து கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ததே நடந்துள்ளது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை