உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் குவாரி முறைகேடு; அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

மணல் குவாரி முறைகேடு; அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக, தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், தொழிலதிபர்கள் ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், சொத்து முடக்கத்தை நீக்க கோரியும் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு இன்று(ஜூலை 16) விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படவில்லை. அமலாக்கத் துறையின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது” என வாதிட்டனர்.

சட்டவிரோதம்

இதையடுத்து, “அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது. மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது” என்று குறிப்பிட்டு தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தனர். அவர்களது சொத்து முடக்கத்தை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Krishna Gurumoorthy
ஜூலை 22, 2024 16:57

கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்யும்


S.jayaram
ஜூலை 22, 2024 11:16

இப்படித்தான் நமது சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை, இதை அந்த சட்டத்தின் கீழ் வராது என்று குற்றவாளிகள் தப்பிகின்றனர், குற்றம் நடந்து உள்ளதா இல்லையா? அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் மண் அள்ளபட்டுள்ளதா இல்லையா? இந்த வழக்கை அந்த சம்பந்த பட்ட துறை நடத்த அறிவிருத்தலாம். இந்த நாட்டில் நிர்வாகம் என்பது சட்டத்தின் மூலம் நடக்கிறது என்பார்கள், ஆனால் இங்கே குற்றம் நடந்தாலும் சம்பந்தபட்ட துறைகள் கண்டு கொள்வதில்லை வேறுவழியாக குற்றங்களை கண்டுபிடித்தால் அதை சட்டம் அனுமதிக்காது அப்புறம் எப்படி நிர்வாகம் ஒழுங்காக மக்களுக்கு பணியற்றமுடியும் எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும்


Parthasarathy Badrinarayanan
ஜூலை 21, 2024 16:57

திருடர்களுக்கு ஆதரவான தீர்ப்பு. மணல் கொள்ளையர்கள் ஆட்டத்தை அடக்கமுடியாது.


karutthu
ஜூலை 21, 2024 15:13

லஞ்சம் மட்டும் அல்ல மிரட்டலும் கூட ?


karutthu
ஜூலை 21, 2024 15:10

அஹா ஆஹா என்ன அருமையான தீர்ப்பு.?.


RAMASAMY
ஜூலை 20, 2024 18:29

Stupid judges are common in Madras High court. Today lawyers started fighting throwing chirs. This is the rowdyism in judicial fraternity.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 20, 2024 08:44

தோண்டினால் எல்லாம் பாஜக ஆளுங்களா சிக்குறாய்ங்க


vadivelu
ஜூலை 21, 2024 06:49

அவ்வளவு மன்னர் கொள்ளை ஆட்கள் பா ஜா கா வில் இருக்கங்களா, அப்ப ஒரு போராட்டம் நடத்தி பிடித்து உள்ளே போடுங்க என்று சொல்லுவோமா.


prabaharan kumarasamy
ஜூலை 20, 2024 08:09

Yes


Ashok Subramaniam
ஜூலை 19, 2024 21:55

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படவில்லை. அமலாக்கத் துறையின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது” என கொள்ளைக்காரர்களின் வக்கீல்கள் வாதாடுவார்களாம்? இதையடுத்து, “அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது. மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது” என்று நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்களாம் அட்லனா சோ அவர்களின் "உண்மையே உன் விலை என்ன" நாடகம் மீண்டும் அரங்கேறியதோ?


Iniyan
ஜூலை 19, 2024 14:49

நீதி மன்றங்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி