உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் விற்பனை விவகாரம்: அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை

மணல் விற்பனை விவகாரம்: அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை

சென்னை: நிர்ணயித்த அளவுக்கு மேல் குவாரிகளில் மணல் எடுத்து விற்றதாகவும், அந்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் புகார் வந்தது. அதன்படி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.பல இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராகும்படி சம்பந்தப்பட்ட கலெக்டர்களுக்கு 'சம்மன்' அனுப்பியது. அதை எதிர்த்து கலெக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர். அமலாக்கத்துறை சம்மனுக்கு ஐகோர்ட் தடை விதித்தது.அதை அடுத்து, குவாரி அதிபர்களும் கோர்ட்டை நாடினர். சென்னை ராஜ்குமார் ஆனைமுத்து, புதுக்கோட்டை சண்முகம் ராமச்சந்திரன், திண்டுக்கல ரத்தினம் ஆகிய மூன்று பேர் தனித்தனியே வழக்கு போட்டனர். மனுக்களில அவர்கள் கூறியதாவது:அமலாக்கத்துறை விசாரணைக்கு அடிப்படையாக உள்ள வழக்கில், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. 2018-ல் இருந்து 2023 வரை, நான்கு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.அவற்றில், எந்த வழக்கிலும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை; எங்களை குற்றம் சாட்டவும் இல்லை. எங்களுக்கு அனுப்பிய சம்மன் தெளிவில்லாமல் உள்ளது. சாட்சியாக அழைக்கின்றனரா அல்லது சந்தேகத்தின்படி அழைக்கின்றனரா என்பதை தெரிவிக்கவில்லை. எனவே, எங்களுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும்; அதுவரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு கோரிய மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களுக்கு பின், அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த, இடைக்காலத் தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Raju Ramasamy
ஜன 06, 2024 17:32

நீதியை நிலை நாட்ட முடியவில்லை என்றால் எதற்கு பதவியில் இருக்கணும் . பாவம் மக்கள் .... இதற்கு தீர்வு ஆண்டவன் கையில் தான் உள்ளது ...அண்ணாமலையார் பார்த்து கொள்வார் .....


Dharmavaan
ஜன 06, 2024 13:55

0000


Sridhar
ஜன 06, 2024 13:45

என்னய்யா நடக்குது? கலெக்டர்களுக்கு கொடுத்த சம்மன்களுக்கு 3 வார தடை விதித்திருந்தனர். அந்த கெடு முடிந்து 3 வாரம் ஆகிவிட்டது. இப்போது அதன் நிலை என்னவென்று தெரியவில்லை ஏன் இந்த விசாரணையில் இவ்வளவு பெரும் தொய்வு?


Dharmavaan
ஜன 06, 2024 13:45

இந்த இரண்டு நீதிகளின் செயல்கள் திமுக ஆதரவு .கொலீஜியும் முறை நீக்கப்பட்டால் இது போன்றோர் நீதியாக வர தடைபடும் நீதி நிலைக்கும்


rasaa
ஜன 06, 2024 11:45

நீதிபதிகளும் மனிதர்கள்தானே. அவர்களுக்கும் குடும்பம், குட்டிகள் இருக்காதா?


அசோகன்
ஜன 06, 2024 11:34

மணல் கொள்ளை நடத்துபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றம் இப்படி மணல் கொள்ளையர்களுக்கு சார்பாக நடந்தால் எப்படி???? பேசாமல் நீதிமன்றமே திமுகவுக்கு நேரடியாக சொல்லிவிடலாம்


Sathyam
ஜன 06, 2024 11:21

உச்ச நீதி மன்றம் பாசாங்குக்காரர்களை இரட்டை வேடம் போடுங்கள், முதலில் நீங்கள் கொலீஜியம் அமைப்பில் இருந்து வெளியே வந்து NJAC ஐ ஏற்றுக் கொள்ளுங்கள். முதலில் நீங்கள் RTI சட்டத்தின் கீழ் வந்து, அனைத்து நீதிமன்றங்களிலும் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதன் மூலம் தேசத்தின் பணத்தை கொடூரமாக வீணடிப்பதால் வெளிப்படைத்தன்மையுடன் இருங்கள். தயவு செய்து எந்தவொரு பொது விழாவிற்கும் செல்லாதீர்கள், சொற்பொழிவு செய்யாதீர்கள் அல்லது ஏளனம் செய்யாதீர்கள், ஏனெனில் நீங்கள் ஒழுக்க ரீதியாக தகுதியற்றவர் மற்றும் பொது வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்தீர்கள். நீங்கள் மிகவும் சீரழிந்து செயல்படாத நிறுவனங்களில் ஒருவராக இருப்பதால், நீங்கள் தேசத்திற்கு இறுதி சாபம். தேசத்தின் 95% குடிமக்கள் நீதித்துறை மற்றும் காவல்துறையின் மீது நம்பிக்கையையும் நம்பிக்கையையும் இழந்துவிட்டனர், மேலும் நீங்கள் மற்றவர்களுக்கும் ஒழுக்கக்கேடான நடத்தைக்கும் அறிவுரைகளை வழங்குகிறீர்கள். தேசத்தின் மக்கள் உங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய எங்கள் சாபமும் விதியும் உங்களுக்கு வெட்கமாக இருக்கிறது.


Dharmavaan
ஜன 06, 2024 13:46

வெளிப்படை உண்மை


Sathyam
ஜன 06, 2024 11:20

மிகவும் திறமையற்ற ஊழல் நிறைந்த காவல்துறை/நீதித்துறை அமைப்புகள் சீர்திருத்தப்பட்டு சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் வரை, பல கரும்புலிகள், விஷக் கரையான்கள் போன்ற எந்த மாநிலத்தையும் சேதப்படுத்த உள்ளுக்குள் துரோகிகள். மிக மோசமான பரிதாப நிலை பாரதத்தின் பெரும்பாலான மாநிலங்களில். பெரும்பாலான மாநிலங்களில் உள்ள 95% போலீசார் ஊழல்வாதிகள், அவர்களின் அரசியல் எஜமானர்களால் மிகவும் குற்றவாளிகள். உண்மையில் ஐ மேம்படுத்தத் தயாராக இல்லாத நமது நீதித்துறையை உலகிலேயே மிக மோசமான ஒன்றாகக் குற்றம் சாட்டுவோம், அதாவது (உருப்பாடா திருந்தா) தயாராக இல்லை, மேலும் உச்ச ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் SUO மோட்டோ வழக்குகளை ஒரு சார்புடைய மீடியாவின் அடிப்படையில் எடுக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் மற்றும் அவர்களின் சொந்த கருத்து உண்மை இல்லாமல் மற்றும் முற்றிலும் பகுதி மற்றும் சமரசம் இல்லை. இப்போது SC என்றால் (உச்ச ஒதுக்கீடு) தானே முற்றிலும் தோல்வியடைந்த தோல்வி மற்றும் திறமையற்ற, திறமையற்ற மற்றும் IIT/ பல நிறுவனங்கள் ஏன் அழைக்கின்றன என்று எனக்கு புரியவில்லை தலைமை நீதிபதி அல்லது எந்த நீதிபதிகளும் தங்கள் செயல்பாடுகள் அல்லது மாநாட்டிற்காக, அவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல, அதற்கு பதிலாக அவர்கள் ஒரு சிப்பாயை அழைக்கலாம். அல்லது எல்லைகளைக் காக்கும் நேர்மையான அதிகாரி அல்லது குற்றவாளிகள், பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் தங்கள் உயிரைப் பணயம் வைத்தவர்கள். போது உச்ச ஒதுக்கீடு , முழு நீதித்துறை சமரசம், நிலுவையில் உள்ள கோடிக்கணக்கான வழக்குகள், மொத்த தோல்வி, போலீஸ் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும் நேர்மையான அடக்கமான, திறமையான, பாரபட்சமற்ற, தங்கள் சொந்த ஞானத்தின்படி செயல்படுங்கள், அது நமது சாபமும் விதியும் ஆகும். இன்றைய நிலையில் 95% மக்களுக்கு நீதி கிடைக்காது, ஆனால் கண்டிப்பாக மஞ்சள் காமாலை வரும் என்பதால், நீதித்துறை/காவல்துறை மீதான நம்பிக்கையை குடிமக்கள் இழந்துவிட்டனர். சித்திரவதை, இழுத்தடிப்பு, காவல் நிலையங்களில் முறையான எஃப்.ஐ.ஆர் இல்லை, அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், பொறுப்புக்கூறல் இல்லை, அதற்கு பதிலாக அவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் தெய்வீக நீதிக்காக காத்திருங்கள் மற்றும் பிரார்த்தனை செய்யுங்கள், இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்த முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தகராறுகள், நீதித்துறை மற்றும் காவல் துறையின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் காரணமாக தேசிய வளர்ச்சி.


Balraj Alagarsamy
ஜன 06, 2024 16:49

முதலில் காவல் நிலையத்தில் திமுக கட்சிக்காரனுக்கு என்ன வேலை .., அங்கே கட்சி வேட்டி கட்டிக்கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்கின்றனர்.. இதற்கு உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு உத்தரவு போடவேண்டும். திமுக ஆட்சி வந்தாலே காவல்நிலையத்தில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாகி விட்டது..


Sathyam
ஜன 06, 2024 11:20

உங்கள் வாயில் ஃபெவிகால் இருந்தது, ஆனால் சிறப்பு பெஞ்சை திறக்க நேரம் இருக்கிறது டீஸ்டா செட்டல்வாட், போலி மற்றும் வெறுப்புணர்ச்சியாளர் பத்திரிகையாளர் ஜூபியர். அற்புதம் இப்போது நான் தான் காஷ்மீர் கோப்புகளில் உரையாடல் " சர்கார் சாயே கிசிகா போ ஹோ, பர் அந்தர் கா சிஸ்டம் தோ பூரா ஹமாரா ஹை" இப்போது எத்தனை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் போடுவீர்கள் உன்னைக் கேள்வி கேட்பவர்கள், அது வலிக்கிறது மற்றும் கிரிப்ஸ் மற்றும் முள்ளைப் போல் அடிக்கிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் என்ன செய்வது பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அதற்கு முன்பே நிலுவையில் உள்ள அப்பாவி பொது மக்கள் தீர்ப்பு அல்லது தீர்ப்பு அவர் உயிருடன் இல்லாமல் இருக்கலாம்


Sathyam
ஜன 06, 2024 11:19

சுப்ரீம் கோர்ட்டில் இருந்து எந்த முறையான தீர்ப்பையும் எதிர்பார்க்க வேண்டாம், பாரதத்தின் அவமானம். அவர்கள் முழுமையாக இருக்கிறார்கள் இடதுசாரிகள்/ ஜாமீன் வழங்க அவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர் மற்றும் போலியான பல பத்திரிகையாளர்களைப் போல. எல்ஜிபிடி ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை மேற்கொள்ள உச்ச ஒதுக்கீடு ஆர்வமாக உள்ளது இது தேசத்திற்கு ஒருபோதும் முக்கியமோ அல்லது முன்னுரிமையோ இல்லாதது மேலும் அவை நம் அகத்தை அழிக்க நரகத்தில் உள்ளன சமூக அமைப்பு மற்றும் கலாச்சாரம் மற்றும் இந்த தீய நீதிபதிகள் எந்த விஷயத்திலும் தலையிட விரும்புகிறார்கள் இந்து பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் இஸ்லாம் சம்பந்தமாக ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களின் வாயில் ஃபெவிகோல் அல்லது ஃபெவிகோலை வைத்திருங்கள் வருகிறது. அதுதான் பாரதத்தின் உச்ச ஒதுக்கீட்டின் பரிதாபகரமான நிலை மற்றும் கேவலமான அணுகுமுறை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை