உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேகமாக நிரம்புகிறது சாத்தனூர் அணை; தென்பெண்ணையில் வெள்ள அபாயம்

வேகமாக நிரம்புகிறது சாத்தனூர் அணை; தென்பெண்ணையில் வெள்ள அபாயம்

கிருஷ்ணகிரி: சாத்தனூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தென்பெண்ணை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 2100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையின் நீர்மட்டமானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. 119 அடி நீர்மட்டம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை இன்று எட்டவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தி உள்ளார். தென்பெண்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை