உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் கருத்து சர்ச்சைக்குரியது; தமிழகம், திராவிடம் பிரிக்க முடியாது என்கிறார் அமைச்சர் ரகுபதி

சீமான் கருத்து சர்ச்சைக்குரியது; தமிழகம், திராவிடம் பிரிக்க முடியாது என்கிறார் அமைச்சர் ரகுபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: ''சீமான் கருத்து சர்ச்சைக்குரியது; தமிழகம், திராவிடம் பிரிக்க முடியாது,'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், ரகுபதி கூறியதாவது: அ.தி.மு.க.,வுடன் யாரும் கூட்டணியில் சேர தயாராக இல்லாததால், இ.பி.எஸ்., விரக்தியில் பேசுகிறார். தி.மு.க., கூட்டணி உடைந்துவிடும் என இ.பி.எஸ்., பகல் கனவு கண்டு வருகிறார். இது பலிக்காது. தி.மு.க., கூட்டணி எந்த சூழ்நிலையிலும் உடையாது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாடக்கூடிய ஒன்று. சீமான் கருத்து சர்ச்சைக்குரியது; தமிழகம், திராவிடம் ஆகிய இரண்டும் இந்த தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாதவை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hn71qhkk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

திராவிடம்

தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, அனைத்தும் திராவிடம் சார்ந்த கட்சிகள் தான். திராவிடம் சாராத எந்த கட்சிகளும் இல்லை. யாராக இருந்தாலும் கட்சியை ஆரம்பிக்கும் போது, திராவிடத்துடன் இணைந்து தான் ஆரம்பித்து இருக்கிறார்கள். திராவிடம் என்பது தமிழ் மண்ணில் ஊறிப்போன ஒரு சொல். இதனை தி.மு.க., முன்னெடுத்து செல்லும். ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த இயக்கத்தின் தலைமை பலவீனம் ஆகிப்போனால், அந்த இயக்கம் தானாகவே அழிந்துவிடும்.

மக்கள் கோரிக்கை

இ.பி.எஸ்.,சின் தலைமை பலவீனமாகி இருக்கிறது. அதன் எடுத்துக்காட்டு தான் இந்த புலம்பல். அ.தி.மு.க., உடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கை உடைய பார்ட்னராக அ.தி.மு.க.,வை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. அவர் வலைவீசி கொண்டு இருக்கிறார். ஆனால் யாரும் கூட திரும்பி பார்க்கவில்லை. இதுதான் உண்மை. சீமான் கற்பனையில் சொல்லி கொண்டு இருக்கிறார். தி.மு.க., உடன் கூட்டணியில் திருமாவளவன் உறுதியோடு இருக்கிறார். கவர்னர் ரவியை மாற்ற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த மக்களின் ஒரே கோரிக்கை. இவ்வாறு ரகுபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Mani . V
அக் 22, 2024 05:49

ஆமா, நீ அந்த JJ காலேஜ் ஒனர்தானே? JJ - J. Jayalalitha


Bala
அக் 21, 2024 21:09

ஒவ்வொரு நாடும் தங்கள் மொழியை வைத்து அந்தந்த நாடுகளின் பெயர் தமிழ்நாடு மட்டும் தான் திருட வந்த தெலுங்கங்களின் திருட்டுத் திராவிடம். இதற்கு முடிவு எழுதியாச்சு இனி கோவிந்தா கோவிந்தா தான்


Nagarajan S
அக் 21, 2024 19:57

கவர்னரை மாற்ற வேண்டும் என்பது திராவிட கூட்டணி கட்சிகளின் முடிவே தவிர தமிழக மக்களின் முடிவு அல்ல.


theruvasagan
அக் 21, 2024 19:00

தமிழ்நாட்டில் தெலுங்கர் மலையாளி கன்னடர் மூவரும் ஒருநாள் ஒன்று சேர்ந்தார்கள். அவர்கள் தமிழனுக்கு சூட்டிய கற்பனை பெயர்தான் திராவிடன். இது எதற்காக. தமிழனை மூளைச்சலவை செய்ய. தமிழ் மொழி தமிழன் தமிழ் பண்பாடு இவைகளின் பெருமையை சிறப்பை மாண்பினை இ்ல்லாமல் போகச் செய்ய . இந்த திராவிடம் என்கிற கோட்பாட்டை மற்ற மூன்று மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கவனிக்கத் தக்கது. தமிழன் மேல வந்து விடக்கூடாது என்கிற பொச்சரிப்பினால் தீட்டப்பட்ட சதிவலைதான் இந்த திராவிடமாயை.


krishna
அக் 21, 2024 18:43

OOPIS KUMBALUKKU SINDHIKKUM THIRAMAYOO PODHU ARIVOO ZERO.DRAVIDAM ENDRAAL SOUTH INDIA STATES MUZHUVADHUM ADHAAN TN KERALA ANDHRA KARNATAKA. THAMIZHAI KEVALA PADUTHIYA THANDHAI ENA KOORA PADUM KOMALI KARNATAKA AALU.AAGAVE THAMIZHAYUM THAMIZH NAATAYUM MIGA KEVALAMAA PESINAAR.AANAL IVARDHAAN DRAVIDA MODEL KUMBALIN GURU.KEVALAM.


RAVINDRAN.G
அக் 21, 2024 18:12

திராவிடம் என்றால் என்ன ? ஒரு வெங்காயமும் இல்ல


Bala
அக் 21, 2024 21:12

வெங்காயம் தான் உரிக்க உரிக்க ஒன்றுமில்லை அதனால்.


bgm
அக் 21, 2024 18:09

மழை நீர் வடிகால் என்ன ஆயிற்று? 4000 கோடி..? எவ்ளோ மடை மாற்றினாலும் மரக்க மாட்டோம்


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 21, 2024 18:09

மழைக்கு கூட மதராசாவிற்குள் நுழையாமல் சில தற்குறி பேர்வழிகள் யார் இந்தியநாட்டிற்கு வந்தேறி என பேசுவது .. படிப்பு வாசனையே இல்லாத ஆட்களையும் இன்னைக்கு வரலாற்றை திரிச்சு பேச வெச்ச ட்ராவிடனை நினைச்சா.. அவனின் புத்திஸ்வாதீனத்தை நினைக்கையில் சிரிப்பு சிரிப்பா வருது ..


krishnamurthy
அக் 21, 2024 17:49

இவர் திராவிடம் என்றல் ன்ன என்று விளக்கவேண்டும்


Bala
அக் 21, 2024 17:46

ஊழலும், திமுக வும் போல....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை