உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் இரண்டாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடக்கக் கல்வித் துறையில், 2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தை, இடைநிலை ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் , குண்டுகட்டாக கைது செய்தனர். இதற்கிடையில், இடைநிலை ஆசிரியர்களை பேச்சுக்கு அழைத்தது, பள்ளிக்கல்வித் துறை. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், இரண்டாவது நாளாக, சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் முற்றுகையிட்டு, நேற்றும் போராட்டம் நடத்தினர். அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து கோஷம் எழுப்பினர் . அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். குழந்தைகள், தங்கள் பெற்றோரை இறுக பற்றிக் கொண்டு கதறி அழுதனர். இந்த கைது நடவடிக்கை யின்போது, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலர் ராபர்ட் உட்பட சில ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கை விரலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை அரசு பஸ்களில் ஏற்றிய போலீசார், நேற்று முன்தினம் போல சென்னையை வலம் வந்தனர். பொறுமையை இழந்த ஆசிரியர்கள், பஸ்சில் இருந்து கீழே இறங்கி, கோயம்பேடு 100 அடி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அனைவரும் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.

அடக்குமுறையின் உச்சம்

தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி நடவடிக்கை மேற்கொள்ளாமல், இடைநிலை ஆசிரியர்களை கைது செய்வது, அடக்குமுறையின் உச்சம். முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தலையிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். - பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Palanisamy Sekar
டிச 28, 2025 07:29

ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு பேச்சு வந்தபிறகு அது மறந்துபோய் நாலரை வருடங்களாக கோரிக்கையாக வைத்து வைத்து காத்திருந்து காத்திருந்து போராட தூண்டிய ஸ்டாலின் தனது பேச்சின் உரையை திரும்ப கேட்டுப்பார்க்கட்டும். பொய்யன் என்கிற பட்டதோடு பதவியில் இன்னும் இருக்கவேண்டுமா என்கிறார்கள் கல்வியை கற்பித்த ஆசிரியர்கள். பதவிக்காக ஏமாற்றியது நியாயமே இல்லை என்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் என்று வீரவசனம் பேசிய ஸ்டாலின் சொல் ஒன்று செயல் ஒன்றாக இருந்து ஆட்சியின் பதவி சுகத்துக்காக எங்களை ஏமாற்றலாமா என்கிறார்கள். சபிக்கின்றார்கள். ஸ்டாலினுக்கு இந்த வயதில் இது தேவையா என்கிறார்கள். தான் பொய்யனல்ல என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லையேல் தேர்தலில் ஸ்டாலின் தோற்பது உறுதி என்கிறார்கள் அணைத்து மக்களுமே. யோசிப்பாரா ஸ்டாலின்?


Mani . V
டிச 28, 2025 07:25

மன்னரும், இளவரசரும் கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை