உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கணும்: மத்திய அமைச்சர் விருப்பம்

தமிழகத்தில் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கணும்: மத்திய அமைச்சர் விருப்பம்

சென்னை: 'தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை சம்பவம் அதிகரித்து வருவதால் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்' என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு, இன்று (ஜூலை 17) மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்றார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி ராம்தாஸ் அத்வாலே மரியாதை செலுத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=041kdlb2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பாதுகாப்பு அதிகரிக்கணும்!

ராம்தாஸ் அத்வாலே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை சம்பவம் அதிகரித்து வருவதால் தலைவர்களின் பாதுகாப்பு முக்கியம். கிருஷ்ணசாமி, திருமாவளவன் மற்றும் ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

சி.பி,ஐ., விசாரணை

தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்பவர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி,ஐ., விசாரணை மூலம் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பிரேம்ஜி
ஜூலை 18, 2024 06:42

மக்களின் பாதுகாப்பை பற்றியும் கவலைப்படுங்கள் அமைச்சரே!


sundarsvpr
ஜூலை 17, 2024 20:19

அரசியல் கட்சிகளின் ஆட்களை கட்சிகள் தான் பாதுகாப்பாய் அரணாய் இருக்கவேண்டும். அதுபோல் மக்களும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தெருவுக்கு தெரு காவல் நிலையம் அமைத்துக்கொண்டு பாதுகாத்து கொள்வதே சரியான தற்காப்பு முறை. தங்களை தாங்களே காப்பாற்றிக் கொண்டால் ஆண்டவன் காப்பான்


முருகன்
ஜூலை 17, 2024 18:27

எந்த கட்சி அரசியல் தலைவரும் அரசியல் மட்டும் செய்தால் பிரச்சினை இல்லை வேறு பல வேலைகள் செய்வது தான் பிரச்சினைக்கு காரணம்


தமிழ்வேள்
ஜூலை 17, 2024 17:58

சாதி தலைவர்கள் ரவுடிகளாக இருப்பது தான் பிரச்சினையே...


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 17, 2024 17:10

அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வேணும் ன்னு எவனுமே பேசமாட்டேன்றான் ...


Anbu Raj
ஜூலை 17, 2024 16:58

உங்களே மாதிரி பிஜேபி இடம் போனால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று சொல்லிறவேண்டியதான


karutthu
ஜூலை 17, 2024 16:23

தலித் தலைவருக்கு மாட்டு மா பாதுகாப்பு ? இதில் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் அணைத்து சமுதாய தலைவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை