உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரம் இருந்தால் வெல்கம் மோடி இல்லையென்றால் கோ பேக் மோடி தி.மு.க.,வை வெளுக்கும் சீமான்

அதிகாரம் இருந்தால் வெல்கம் மோடி இல்லையென்றால் கோ பேக் மோடி தி.மு.க.,வை வெளுக்கும் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை, மாநாடு போட்டு அறிவிப்பேன்,'' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இலங்கை செம்மணி பகுதியில், மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், தமிழ் இன படுகொலை நடத்தப்பட்டு, தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டதற்கு நீதி கேட்டு, நா.த.க., சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின், சீமான் அளித்த பேட்டி:

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. ஆனால், இலங்கை, இந்திய அரசுகள், போர் என்ற அளவில் நிறுத்துகின்றன. நாங்கள், அந்த போரே குற்றம் என்கிறோம். அங்கு தோண்ட தோண்ட எலும்பு கூடுகள் கிடைக்கின்றன. போரின்போது சரணடைந்த, 10,000க்கும் மேற்பட்டோர் என்ன ஆயினர் என தெரியவில்லை. இதை கேட்க யாருமில்லை. ஒருநாள் தமிழக அரசியல் அதிகாரம் எங்களிடம் வரும்போது, அங்கு விடியல் பிறக்கும். தமிழகத்தில் தற்போது உள்ள அதிகாரம், தமிழ் இனத்திற்கு துரோகம் விளைவித்து வருகிறது. இங்கு போராடக் கூட அனுமதி மறுக்கின்றனர். குறிப்பிட்ட ஜாதி, மத எலும்பு கூடுகளாக இருந்தால் பொங்கியிருப்பர். இறந்திருப்பது தமிழனாக இருப்பதால் அமைதியாக உள்ளனர். பிரதமர் மோடி வருவது தமிழகத்திற்கு பெருமை என்கிறார், தி.மு.க., அமைச்சர். அதிகாரம் இருந்தால், 'வெல்கம் மோடி' என்றும், எதிர்க்கட்சியாக இருந்தால், 'கோ பேக் மோடி' என சொல்வதும் தி.மு.க.,வின் வாடிக்கை. ஒரு பெண்ணை கற்பழித்து விட்டார் என சொல்லாமல், அவரது உடல் இச்சையை தீர்த்து கொண்டார் என்று கூற வேண்டும் என்பதுபோலதான், 'இது சிறுநீரக திருட்டு அல்ல, முறைகேடு' என, அமைச்சர் சொல்லும் கருத்து உள்ளது. நா.த.க., வேட்பாளர் பட்டியலை, மாநாடு நடத்தி வெளியிடுவேன். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V RAMASWAMY
ஜூலை 27, 2025 08:59

திருடர்கள் முன்னேற்றத்திற்காக எதையும் செய்ப்பவர்கள் தமிழகத்தையும் தமிழர்களையும் அடமானம் கூட வைத்துவிடுவார்கள். வெட்கப்பட வேதனைப்படவேண்டியவர்கள் வாக்காளர்களே.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 27, 2025 08:41

நீயும், விஜய்யும் முறையே பி மற்றும் சி டீம் வெச்சு நடத்துறது எங்களுக்குத் தெரியாதாக்கும் ?


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 27, 2025 06:32

விடியல் மனசாட்சி ,நமக்கு சூடு சொரணை கெடயாது தம்பி


சசிக்குமார் திருப்பூர்
ஜூலை 27, 2025 06:30

அடப்பாவி ஏற்கனவே அவனுக புதுப்புது பெயராக வைத்து குற்றம் செய்யரானுக இதில் நீ வேறு ஐடியா தரயா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை