உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: முதுநிலை உதவியாளர் கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: முதுநிலை உதவியாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருத்தாசலம்: பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விருத்தாசலம் வருவாய்த்துறை முதுநிலை உதவியாளர் ராஜ்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கடலூர் மாவட்டம் திருமுட்டம் தாலுகாவை சேர்ந்தவர் நேரு. இவரின் மாமனார் நாகராஜனுக்கு சொந்தமான 8.50 சென்ட் நிலத்திற்கான பட்டா பக்கத்து நிலத்து உரிமையாளர் பெயரில் தவறாக இருந்துள்ளது. இதனை சரி செய்ய விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ராஜ்குமார் என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நேரு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் ஆலோசனைப்படி ராஜ்குமாரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை நேரு கொடுத்தார். தாலுகா அலுவலக வாயிலில் லஞ்சப்பணத்தை வாங்கிய ராஜ்குமாரை, அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2025 20:24

எலி, பூனை, குரங்குகளுக்குப் பதிலாக இவனை மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .....


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி