உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாமின் கிடைக்குமா செந்தில் பாலாஜிக்கு? ஜன. 12ல் நீதிமன்றம் தீர்ப்பு

ஜாமின் கிடைக்குமா செந்தில் பாலாஜிக்கு? ஜன. 12ல் நீதிமன்றம் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது, ஜன., 12ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூன் 14ல், அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு, 3வது முறையாக செந்தில் பாலாஜி சார்பில், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு, நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகினர்.மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதாடியதாவது:சிறையில், 207 நாட்களாக மனுதாரர் உள்ளார். இந்த வழக்கில் விசாரணையும், காவல் விசாரணையும் முடிந்து விட்டது. கைப்பற்றிய அனைத்து ஆவணங்களும், அமலாக்கத் துறையிடம் உள்ளன. சிறையில் தொடர்ந்து அடைப்பது, மனுதாரருக்கு தண்டனையை முன்னரே விதிப்பது போலாகும்.இவ்வாறு அவர் வாதாடினார்.கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதாடியதாவது:வருமான வரி துறை அதிகாரிகளை, மனுதாரர் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அந்த பணம் முறையாக சம்பாதித்தது என்று அர்த்தம் இல்லை. வருமான ஆதாரம் குறித்து விளக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார்.சூழ்நிலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் கோரி, ஒவ்வொரு மாதமும் மனு தாக்கல் செய்ய முடியாது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கைதானால், குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் இருக்க வேண்டும்.இவ்வாறு வாதாடினார்.இரு தரப்பு வாதங்களை அடுத்து, ஜாமின் மனு மீது, ஜன., 12ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, நீதிபதி எஸ்.அல்லி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜன 10, 2024 01:22

மீண்டும் ஜாமீன் மறுப்பு என்று செய்தி வரவேண்டும். அந்த மீன் இருக்கு, இந்த மீன் இருக்கு, ஆனால் பாவம் இந்த ஆளுக்கு அந்த ஜா'மீன்' மட்டும் கிடைக்க மாட்டேங்குது. சமுத்திரத்திலேயே அந்த மீன் இல்லையாம்...


Jai
ஜன 09, 2024 20:19

அடுத்த கேஸ் ரெடியானவுடன் இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கும், அடுத்த வழக்கில் பிடிவாரண்ட உடன். வாய் திறந்து பேசினால் வாய்ப்பு உண்டு. தேர்தல் செலவுக்கு எங்கு பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று கூறுங்கள், வெளியே வரலாம்


Anand
ஜன 09, 2024 17:13

ஒருவேளை உத்தமன் ஆகிவிடுவானோ?


Gopalkrishnan GS Secunderabad
ஜன 09, 2024 16:02

ஆறு மாதங்கள்தான் ஆகிறது. இன்னும் என்ன அவசரம். மெதுவா, உடம்பையெல்லாம் பார்த்துக்கொண்டு வாருங்கள்.


DVRR
ஜன 09, 2024 16:00

செந்தில் பாலாஜி ஒரு தவறும் செய்யவில்லை. ஒரு வேலைக்காக பணம் வாங்குவது, ஏன் நாமும் தான் நம் வேலைக்காக சம்பளம் வாங்குகின்றோமே அதைப்போலத்தான் இதுவும் ஆகவே அவர் குற்றமற்றவர் என்று கருதி அவருக்கு இப்போதைக்கு ஜாமீன் கொடுக்கின்றோம் - இப்படிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். தீர்வு இப்படி வந்தாலும் ஆச்சரியப்படதேவையில்லை


duruvasar
ஜன 09, 2024 15:52

திருடர் கூட்டத்தை விடக்கூடாது. அதுபோக மருத்துவமனைக்கு போகும் வரையிலும் , மருத்துவமனையில் கூடவே இருந்தும் கூட இந்தியாவிலேயே பவர்புல் ஆன திமுக வழக்கறிஞர் பிரிவு சட்ட நுணுக்க ஆலோசனைப்படி ஆள் கொணர்வு மனு போட்டார் அணிலின் மனைவி . ஆனால் 7 மாதங்களாக தலைமறைவான அசோக்கின் மனைவி ஏன் ஆள் கொணர்வு மனு போடவில்லை. இது என்ன மாதிரியான சட்ட நுணுக்கமோ தெரியலீங்கோ.


Narayanan
ஜன 09, 2024 15:33

பாலாஜி இலாக்கா இல்லாத மந்திரியாக தொடரலாம் என்று அறிவிப்புவந்த மாதிரி ஜாமீன் வழங்கலாம் என்று தீர்ப்பு இருக்கக்கூடாது


Narayanan
ஜன 09, 2024 15:28

தப்பித்தவறி ஜாமீன் வழங்காதீர்கள் . அவரின் தம்பியைப்பற்றி யாரும் மூச்சுவிடவில்லையே ஏன் ? கண்ணதிரில் இருந்த பாலாஜிக்கு அந்த குடும்பம் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்களே இப்போ இவருக்கு ஏன் செய்யவில்லை


மேலும் செய்திகள்







புதிய வீடியோ