உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி மனு: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

செந்தில் பாலாஜி மனு: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் கூட தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிப்பதால் ஜாமின் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, திங்கட்கிழமை செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். அன்றைய தினம் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

காவல் நீட்டிப்பு

செந்தில்பாலாஜியின் காவல் 48 வது முறையாக ஜூலை 22 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ram Siri
ஜூலை 20, 2024 08:24

? தான் கிடைக்கும்


Thananjeyan E
ஜூலை 19, 2024 10:50

ஜாமின் இல்லை என்று ஆன பின்பு எதற்கு இத்தனை முறை அப்பில் தள்ளுபடி கோர்ட் நேரத்தை வீணடிக்க வேண்டாம்


Naga Subramanian
ஜூலை 19, 2024 06:06

இவரது தம்பி அசோக்கை பற்றி யாருமே பேசுவதில்லையே ஆம்ஸ்ட்ராங்கை கொலை புரிந்தவர்களை, அலாக்காக தூக்கிய நமது போலீசார், இவரை ஏன் தூக்கவில்லையோ?


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 23:07

அதிகாரியை திருப்பி அடித்ததற்கு குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டிருக்க வேண்டும்.


Jai
ஜூலை 18, 2024 21:05

தமிழக காவல் துறை இவரது தம்பியை தரமாக பாதுகாக்கிறார்கள். விஜய் பாஸ்கரை கேரளா சென்று தூக்கிய காவல் துறையால் இவரது தம்பியை பிடிக்க முடியாதா? தினமும் ஜாமீன் கேட்பதன் பின்னணியில் என்ன அரசியல் திட்டம் என்று தெரியவில்லை.


VinothB
ஜூலை 18, 2024 20:51

13th Feb. 2024-ல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ... கவர்னரும் ஒப்புதல் கொடுத்ததாக news வந்தது...


Indhuindian
ஜூலை 18, 2024 20:30

ஏன் குத்தமா உன் குதம்மா எல்லாம் கடிகார பில் கேத்த குத்தம் அவருக்கென்ன பில்லே குடுத்துவிட்டார் அகப்பட்டவன் நானல்லவா


இராம தாசன்
ஜூலை 18, 2024 20:28

எத்தனை முறை அப்பீல் / தள்ளுபடி - நீதிமன்றங்களுக்கு வேறு எந்த வழக்கும் இல்லையா? எதற்கு இந்த வழக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் /அவசரம்


metturaan
ஜூலை 18, 2024 18:57

அவருக்கென்ன.. எங்க இருந்தாலும் ராஜா தான்.. பாவப்பட்ட பொதுஜனம் தான் அவதிபடறதெல்லாம்..எட்டணா திருடினவனும்... பசிக்கு சோறு எடுத்தவனும்தான் குற்றவாளிகள்.


ganapathy
ஜூலை 18, 2024 18:39

இது எல்லாமே நமது வரியில்


மேலும் செய்திகள்