மேலும் செய்திகள்
ஊக்கத்தொகை கிடைக்கலை; ரேஷன் கடைஊழியர்கள் கவலை
04-Feb-2025
சென்னை:உணவுத்துறை நடத்தும் ரேஷன் கடைகளில் பணிபுரியும், 4,710 ரேஷன் ஊழியர் களுக்கு சீருடை வழங் கும் பணியை, உணவுத்துறை துவக்கியுள்ளது.பொது மக்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மாநிலம் முழுதும் உணவுத்துறை நடத்தும் ரேஷன் கடைகளில் பணிபுரியும், 4,710 ரேஷன் ஊழியர்களுக்கு தலா இரண்டு சீருடை வழங்க, அந்தத் துறை முடிவெடுத்து உள்ளது. அதன்படி, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 10 ரேஷன் ஊழியர்களுக்கு சீருடைகள் வழங்கும் பணி துவக்கப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் சத்யபிரதா சாஹு ஆகியோர் பங்கேற்றனர். இம்மாத இறுதிக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
04-Feb-2025