உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிக்கு பாலியல் தொந்தரவு; நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவு; நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆத்தூர்: அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தகவல் அறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை, அதே பள்ளியில் படிக்கும், 16 வயதுடைய பிளஸ் 1 மாணவர்கள் மூன்று பேர் பாலியல் தொந்தரவு செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yy1xwy8p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி மையத்துக்கு அளித்த புகாரின்படி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் மூன்று மாணவர்களை கைது செய்தனர். போக்சோ வழக்கு பதிவு செய்து அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.பாலியல் தொந்தரவு குறித்து மாணவ, மாணவியரின் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு தகவல் தெரிந்தும் போலீசில் புகார் அளிக்காததால், தலைமை ஆசிரியர் முத்துராமன் ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்பிரியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அன்பு
பிப் 15, 2025 03:23

நடவடிக்கை எடுத்தால் அந்த ஆசிரியர் மீது ஏவல்துறை நடவடிக்கை எடுக்கும். குண்டர் சட்டம் அவர் மீது பாயும். தற்போதைய சூழ்நிலை இதுவே.


jayvee
பிப் 14, 2025 18:15

யாருப்பா அது ..தலைமை ஆசிரியரா ? பாத்தா அப்படி தெரியலையே


sridhar
பிப் 14, 2025 16:34

தினமும் நிறைய கொலை , கொள்ளை , கற்பழிப்பு , கள்ள சாராயம் , கஞ்சா இவற்றை கட்டுப்படுத்த தவறிய போலீஸ் துறை மந்திரியை எப்போது கைது செய்து தரதர என்று வீதியில் இழுத்து செல்வார்கள் .


Ganesh Subbarao
பிப் 14, 2025 14:01

அப்பாவி - இதுதான் திராவிட மாடல் ஆட்சி


Ganapathy Subramanian
பிப் 14, 2025 13:10

நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதோ அல்லது அரசியல்வாதிகள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை. யாரையோ திருப்திப்படுத்த அல்லது எதையோ மடைமாற்ற நடவடிக்கை எடுத்திருப்பது போல் இருக்கிறது.


சமீபத்திய செய்தி