உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சசிகலா சகோதரி மறைவு

சசிகலா சகோதரி மறைவு

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகரில் வசித்து வந்த விவேகானந்தன், கிருஷ்ணவேணி தம்பதியரின் மூத்த மகள் வனிதா. இவருக்கு சுந்தரவதனம், டாக்டர் வினோதகன், இன்ஜினியர் ஜெயராமன், திவாகரன் ஆகிய சகோதரர்களும், சசிகலா என்ற தங்கை என, 6 பேர் உடன் பிறந்தவர்கள். வனிதா, கணவர் விவேகானந்தன்(வனத்துறை அதிகாரி)வுடன் திருச்சி கருமண்டபத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகிய 3 மகன்களும், ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். சர்க்கரை நோய் காரணமாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு வனிதா இறந்தார். அவரது உடலை இறுதி சடங்குக்காக, திருச்சியில் இருந்து மன்னார்குடியில் உள்ள அவரதுஇல்லத்துக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, சசிகலா, சுதாகரன் உட்பட பலர் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை