உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கணவர் பார்வை திரும்பியதால் சிறுமியை கொன்றோம் அமைந்தகரை பெண் வாக்குமூலம்

கணவர் பார்வை திரும்பியதால் சிறுமியை கொன்றோம் அமைந்தகரை பெண் வாக்குமூலம்

சென்னை: 'கணவரின் பார்வை வீட்டு வேலைக்கு வந்த சிறுமி பக்கம் திரும்பியதால், சந்தேகம் ஏற்பட்டு, அவளின் உடலில் அயன் பாக்ஸால் கொடூரமாக சூடு வைத்தும், அடித்து சித்ரவதை செய்தும் கொலை செய்தோம்' என, கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்தவர் சர்புதீன். இவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஓராண்டுக்கு மேலாக முகமது நிஷாத், 36, நாசியா, 30 என்ற தம்பதியர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

புகார்

இவர்களுக்கு ஆறு வயதில் மகன் உள்ளான். முகமது நிஷாத், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், மகனை பார்த்துக்கொள்ள, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி அருந்ததி தேவியை, 15, வீட்டு வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அந்த சிறுமி குளிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து இறந்து விட்டதாக, அமைந்தகரை காவல் நிலையத்தில், இரு தினங்களுக்கு முன் சர்புதீன் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், நாசியா, முகமது நிஷாத், கொளத்துாரைச் சேர்ந்த அவரது நண்பர் லோகேஷ், 36, அவரின் மனைவி ஜெயசக்தி, 24.கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு வேலைக்கார பெண் மகேஸ்வரி, 40, அடையாறு பகுதியைச் சேர்ந்த முகமது நிஷாத் சகோதரி சீமா பேகம், 39 ஆகியோர், சிறுமியை அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது கொலை, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் போக்சோ உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரும் கைது செய்யப்பட்டு, வரும், 16 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசாரிடம் நாசியா அளித்துள்ள வாக்குமூலம்:கோவை தென்னம்பாளையத்தில், எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த போது, அங்கு வீட்டு வேலை செய்து வந்த சிறுமியின் தாயை சந்தித்தோம். அவரிடம் பேசி, எங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள, சிறுமியை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தோம். சிறுமியின் தந்தை இறந்து விட்டார். ஒரு மகனுடன், அவரது தாயும் ஏழ்மை நிலையில் உள்ளார்.

பெண்களுடன் தொடர்பு

இதனால், சிறுமியை அடிமை போல நடத்தினோம்; போதிய சம்பளமும் தரவில்லை. அவரது தாயை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. நான்கு மாதத்திற்கு முன்தான், சிறுமி பூப்பெய்தினார். அவர் சொந்த ஊருக்கு சென்றால், மீண்டும் வர மாட்டார் என்பதால் நாங்கள் அனுப்பவில்லை.என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனால், எங்களுக்குள் தினமும் தகராறு ஏற்படும். சிறுமி கருப்பாக இருந்தாலும் அழகாக இருப்பார். அதனால், என் கணவரின் பார்வை சிறுமியின் பக்கம் திரும்பியது. அதில், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.ஏதாவது காரணத்தை சொல்லி, சிறுமியை சித்ரவதை செய்யத் துவங்கினேன். திருட்டு பட்டமும் கட்டி வந்தேன். சிறுமி மீது என் கணவருக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக, குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என, ஏதேதோ பொய் சொல்லி, அவருக்கும் ஆத்திரம் உருவாகச் செய்தேன். என் கணவரின் நண்பர் லோகேஷ் மீது, விருதுநகர் மாவட்டத்தில் கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்த வழக்கு உள்ளது. மனைவி ஜெயசக்தியுடன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். லோகேஷ் முரட்டுத்தனமானவர். அவரிடமும், சிறுமி மீது வெறுப்பு ஏற்படும் வகையில், பொய் கதைகளை சொல்லி வந்தேன். ஒரு முறை லோகேஷ், ஜெயசக்தி ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்த போது, அவர்கள் எடுத்து வந்த பொருள் ஒன்று தொலைந்து விட்டதாகக் கூறினர்.இது தான் சமயம் என, அந்த பொருளை சிறுமி தான் திருடி இருப்பார் என்று கூறினேன். என்னுடன் சேர்ந்து, அவர்களும் சிறுமியை திட்டினர். தேடிப்பார்த்த போது அந்த பொருள் மேஜைக்கு கீழே கிடந்தது.

அயன்பாக்ஸால் சூடு

சிறுமி எந்த வேலை செய்தாலும், குறை சொல்லி திட்டுவேன். அவரின் நெஞ்சுப்பகுதி உட்பட பல இடங்களில் அயன்பாக்ஸால் சூடு வைத்துள்ளேன். சொல்லக்கூடாத இடத்தையும் காயப்படுத்தினேன். என்னுடன் சேர்ந்து, கணவரும் சிறுமியை சித்ரவதை செய்ய துவங்கினார்.தீபாவளி அன்று எங்கள் வீட்டிற்கு, லோகேஷ், ஜெயசக்தி, என் கணவரின் சகோதரி சீமா பேகம் ஆகியோர் வந்தனர். அன்று மகேஸ்வரியும் இருந்தார். அப்போது, மகனின் பிறப்பு உறுப்பை பிடித்து சிறுமி இழுத்து விட்டதாக குற்றம் சாட்டி சத்தம் போட்டேன். இதனால், எல்லாரும் சேர்ந்து சிறுமியை அடித்தோம். லேகேஷ் வயிற்றில் எட்டி உதைத்தார். அதில், சிறுமி மயங்கி விழுந்து விட்டார்; மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். அவர் இறந்துவிட்டார் என, தெரியவந்து, உடலை குளியல் அறையில் கிடத்தி விட்டு, வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டோம்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.சிறுமி கொல்லப்பட்ட தகவல் அறிந்து, தன் மகனுடன், சிறுமியின் தாய் சென்னைக்கு வந்தார். ஏழ்மை நிலையில் இருக்கும் அவரால் சிறுமியின் உடலை சொந்த ஊருக்குக்கூட எடுத்துச் செல்ல முடியவில்லை. அதனால், அண்ணா நகர் துணை கமிஷனரை சந்தித்து, மகளை சென்னையிலேயே தகனம் செய்ய உதவிடுமாறு கோரினார். இதையடுத்து, அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ள, வேலாங்காடு மின் மயானத்தில் சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஏழைத்தாயின் பரிதவிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

Pandi Muni
நவ 11, 2024 17:54

மூர்க்க இனம் அழிக்கப்பட வேண்டும்


Matt P
நவ 10, 2024 12:54

நீட் தேர்வு காரணமா மறைந்தவரை தன் தங்கை என்று உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஜய் இவ்வளவு கொடூரமா தாக்கப்பட்ட இந்த பிஞ்சு ஏழை குழந்தையின் வழக்கின் போக்கையும் கண்காணித்து நியாயம் கிடைக்க செய்யலாம். இதுவே அமெரிக்காவிலோ இஸ்லாமிய நாடுகளில் நடந்திருந்தால் விரைவில் கடுமையான தண்டனை கிடைப்பது அங்குள்ள இயல்பு. இந்தியாவிலும் நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.


skv srinivasankrishnaveni
நவ 10, 2024 07:29

ப்ளீஸ் இந்த குப்பைதொட்டிலேடிக்கும் இதேபோல சூடுவைச்சு சித்தரவதை செய்யவேண்டும் சிறுபொன்னைவெலைக்குவைச்சுது முதல் மாபெரும் தப்பு 2 அந்தக் குழந்தையை சித்ரவதை செய்தது 3 புருஷன் பொறுக்கின்னு தெரிஞ்சும் தண்டனை அப்பாவி குழந்தைக்கு செய்தது கொலையும் செய்துட்டு தப்பிக்க எண்ணுவது மாபெரும் தப்பு இந்த நாய்களை இப்படியெல்லாம் செய்யச்சொன்னது நபிகள் நாயகமா? இல்லே allaavaa


மாயவரத்தான்
நவ 07, 2024 21:16

இது போன்று இறந்தவர்களை எரிக்க கூடாதே. சட்டப்படி புதைக்கத்தான் முடியும். சாட்சியங்களை அழிப்பதில் இந்த அரசு திறமையானது.


rasaa
நவ 07, 2024 21:57

சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். இறந்த பெண்ணோ ஆதரவற்ற ஏழை. ஆகவே கொலையாளிகள்மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. ஆதரவற்ற அந்த தாயின் வாய், பணம் மற்றும் பயம் அடைத்துவிடும். நாட்டில் நீதி செத்து எவ்வளவோ காலமாகிவிட்டது.


abdul
நவ 07, 2024 20:21

தூக்கில் போடணும் பிரதர் இந்த மாதிரி பொம்பளையே


Mohamed farook
நவ 07, 2024 14:40

அந்த சிறுமியை எப்படி கொடுமை செய்து கொலை செய்தார்களோ, அதே போலவே இந்த சைக்கோ மனிதர்களையும் கொல்ல வேண்டும். ஆனா, இது நடக்குமான்னு தெரியவில்லை. இதுதான் நீதிமன்றத்துக்கு என்னுடைய வேண்டுகோள். இவர்கள் இந்த பூமியில் வாழ தகுதியில்லாத மனித ஜந்துக்கள்.


Mohammad ali
நவ 07, 2024 13:37

குருமாவளவன் வாயில் என்னஇருக்கிறது


Sampath Kumar
நவ 07, 2024 09:38

இவர்கள் உண்மையில் மூர்க்க ஜென்மங்களே


M Ramachandran
நவ 06, 2024 23:34

ஏழை யாக பிறந்த காரணத்தால் வெளியுலகும் அவள் இறப்பை மறந்து விடும். அந்த சிறுமி இறப்பதற்கு முன்பு எவ்வளவு துன்பங்களை அனுபவித்து இறந்திருப்பாள் மனம் பதறுகிறது. இப்படி பட்ட காலா நெஞ்சுக்காரர்களும் நம்மில் உலாவுகிறார்களே. இதை மன்றம் அவ்வளவு எளிதாக எடுத்து கொள்ளாது. பழையகால அந்தமான் சிறை போன்று தீவாந்திரை சிகிச்சை வேண்டும் அல்லது அரபு நாடுகள் மக்கள் எதிரில் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்.


Muthu
நவ 06, 2024 17:01

இறந்த சிறுமியின் பெயர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை