உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கணவருடன் எஸ்.ஐ., பலி மணமான 2 மாதத்தில் சோகம்

கணவருடன் எஸ்.ஐ., பலி மணமான 2 மாதத்தில் சோகம்

சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அக்கறை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கலைவேந்தன், 36; பரங்கிப்பேட்டை தனியார் அனல் மின் நிலைய பணியாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் இளவரசி, 30; குமராட்சி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக இருந்தார். உறவினர்களான இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த நவ., 14ல் திருமணம் செய்து கொண்டனர்.புதுமண தம்பதியினர், நேற்று காலை, 11:20 மணிக்கு வீரன்கோவில் திட்டில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக பைக்கில், சித்தலப்பாடி அருகே சென்றபோது, எதிரே சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ், இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. அதில், பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி, 20 மீட்டர் துாரம், பைக் இழுத்துச் செல்லப்பட்டது. பஸ்சை ஓட்டி வந்த தற்காலிக டிரைவரான சபரிராஜா, 24, கண்டக்டர் முத்துராமன் பஸ்சை நிறுத்திவிட்டு தப்பினர்.பஸ் பயணியர், பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய தம்பதியை மீட்டனர். ஆனால், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டி.எஸ்.பி., லாமேக் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

gayathri
ஜன 06, 2025 12:26

திறமையான ஓட்டுநராக இருந்தாலுமே எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் அதிகம். இதை யார் மீது தவறு இருந்தாலும் இனி ஒன்றும் நடக்க போவதில்லை. இருவருமே பலியாகி விட்டார்கள். ஆத்மா சாந்தி அடையட்டும்.


VENKATASUBRAMANIAN
ஜன 06, 2025 07:52

இதற்கு யார் பொறுப்பேற்பது. போக்குவரத்து துறையாக இல்லை காவலதுறையா. தற்காலிக டிரைவரை நியமித்தது யார். பொதுமக்கள் உயிருடன் விளையாடியது யார். இந்த விடியல் அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது.


visu
ஜன 06, 2025 08:06

தற்காலிக ஓட்டுநர் என்பதில் என்ன பிரச்சினை .அவர் தகுதியுள்ள ஓட்டுனாரா என்றுதான் பார்க்க வேண்டும் தற்காலிகம் நிரந்தரம் என்பது ஊதியம் சார்ந்தது மட்டுமே அவர் என்ன வாழ்நாள் முழுதும் தற்காலிக ஓட்டுனரா இருப்பேன் என்று சத்தியம் செய்து வேலைக்கு வந்தாரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை