உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் ஏஜென்சி உதவியுடன் தேர்தல் பணி உடன்பிறப்புகள் கலக்கம்

தனியார் ஏஜென்சி உதவியுடன் தேர்தல் பணி உடன்பிறப்புகள் கலக்கம்

தனியார் ஏஜென்சி உதவியுடன் லோக்சபா தேர்தல் பணிகளில் தி.மு.க.,வினர் களம் இறங்கி உள்ளனர். லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகளை திட்டமிடும் பொறுப்பை 'மீடியா பெட்' என்ற தனியார் ஏஜென்சியிடம் தி.மு.க., ஒப்படைத்துள்ளது. தனியார் ஏஜென்சியினர் தேர்தல் பணிகள் தொடர்பான வியூகங்களை வகுத்து தருவதுடன், கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிக்கு ஒருவர் என பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலாக, 6 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தனியார் ஏஜென்சியால் நியமிக்கப்பட்டுள்ளவர்கள், அந்தந்த தொகுதிகளில் தி.மு.க.,வினர் நடத்தும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தேர்தல் பணிகள் குறித்த தகவல்களை அவ்வப்போது தங்கள் நிறுவனத்துக்கு தெரிவிக்கின்றனர். மேலும், தேர்தல் தொடர்பான கூட்டங்கள் துவங்கும் முன்னும், கூட்டம் முடிந்த பின்னரும் போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தேர்தல் கூட்டங்களில் குறைகள் இருந்தாலோ, கூட்டம் குறைவாக இருந்தாலோ சரி செய்து நடத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கூட்டங்கள் நடக்கும் இடம் சிறப்பாக அமைய கட்சியினருக்கு ஆலோசனை வழங்கவும் ஏஜென்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் ஏஜென்சி மூலமாக தேர்தல் பணிகளை கண்காணிப்பதால் உடன்பிறப்புகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை