திருச்செங்கோட்டில் சிலப்பதிகார கோட்டம்
சிலப்பதிகார கோட்டம்
சட்டசபையில் நடந்த விவாதம்:கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: 1973ல், திருச்செங்கோட்டில் நடந்த கண்ணகி விழாவில், அன்றைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். 1953ல் திருசெங்கோட்டில் ஆரம்பிக்கப்பட்ட கண்ணகி விழா, 72 ஆண்டுகளாக இன்றும் நடந்து வருகிறது.இந்த விழாவை நினைவுகூரும் வகையில், சிலப்பதிகார கோட்டம் அமைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின்: திருச்செங்கோட்டில் சிலப்பதிகார கோட்டம் அமைப்பது குறித்து, அதிகாரிகளிடம் கூறப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. ஈஸ்வரனின் கனவு நிச்சயம் நனவாக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.