உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு: சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு: சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர் சிட்டி: பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 64 ஆகவும், மறு பணியமர்த்தப்படும் வயதுக்கான உச்சவரம்பு 69 ஆகவும் அதிகரித்து, சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், சிறு நகரம் மட்டுமே. மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகியவை பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு நடைமுறைகள், திருமண வயது தள்ளிப்போவது, திருமணம் செய்து கொள்ளாதது போன்ற காரணங்களால், இங்கு இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் உடல் உழைப்புக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சூழலில், பணியாளர்கள் சட்டபூர்வமாக ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அரசு அறிவித்துள்ளது.தற்போது ஓய்வு பெறும் வயது 63 ஆகவும், மீண்டும் பணியமர்த்தப்படும் வயது 68 ஆகவும் உள்ளது. புதிய விதிகளின் படி, ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்த்தப்படுகிறது. மீண்டும் பணியமர்த்தப்படுவோருக்கான வயது உச்சவரம்பு 69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 69 வயது வரை அவர்கள் பணியாற்ற முடியும். இந்த உத்தரவு வரும் 2026ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், 2030ம் ஆண்டு ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், மறு பணி அமர்வு செய்யப்படுவோருக்கான வயது உச்சவரம்பு 70 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தாலும், பொருளாதார நலன் கருதி பலரும் தொடர்ந்து வேலை செய்யவே விரும்புகின்றனர். அவர்களுக்கு வேலை அளிப்பதன் மூலம், பொருளாதாரம் மேம்படும்; அவர்களது பணி அனுபவம் நிறுவனங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என அரசு கருதுகிறது. அரசின் திட்டப்படி, வயதானவர்களை அவர்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு அரசு மானிய நிதியுதவி வழங்கப்படும். 'அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பகுதிநேர வேலைக்கு முதியவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். வயதானவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.78,75,785 மானியம் வழங்கப்படும்' என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Gajageswari
டிச 07, 2024 05:54

இந்தியாவிலும்/தமிழகத்தில் 64வயது நடைமுறை படுத்த வேண்டும்


Srinivasan Krishnamoorthy
டிச 04, 2024 22:40

This is happening in IT industry in india - seniors who crossed 60. many are working


தாமரை மலர்கிறது
டிச 04, 2024 20:27

ஓய்வு பெரும் வயதை எழுபதாக உயர்த்துவதே நல்லது. அதற்கு முன் ஓய்வு பெறுவது மனித உழைப்பை வீணடிப்பது. ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. இந்தியாவிலும் ஓய்வு பெரும் வயதை உயர்த்த வேண்டும். அதற்கு முன் ஓய்வு பெற்றால், பென்சன் கிடையாது.


DJ Serve Life
டிச 04, 2024 16:49

is this to apply at 58y and extension two times with recoveries, wow but the first pension 50% of last pay and after 20y of pension benefit, futher 50% of pension last paid is it and continue?


joe
டிச 04, 2024 16:28

வயது முக்கியமல்ல. உழைப்பு முக்கியம் .அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து மனிதாபிமானத்தை நிரூபிக்கவேண்டும்.சுவிட்சர்லாந்தில் இப்படி மனிதர்களை வயதால் அவமானப்படுத்துவதில்லை .நீங்களும் யோசித்துப் பார்த்து மனிதாபிமானத்தை காப்பாற்றுங்கள் .இந்திய அரசாங்கம் இப்படி செய்யும்மா ?.


Senthoora
டிச 04, 2024 16:23

இந்திக்காரன் சிங்கப்பூர் வளர்ச்சிக்காக பாடுபடவில்லைல். தமிழ் மக்களே பாடுபட்டார்கள். நீயே ஒரு தமிழனாக இருந்தும் தமிழனுக்கு துரோகம் செய்யலாமா? எதனை ஜென்மம் எடுத்தாலும் சிங்கப்பூர் தமிழனுக்கு துரோகம் பண்ணாது.


அப்பாவி
டிச 04, 2024 16:01

சிங்கப்பூரில்.இந்தி கத்துக் குடுக்கணும். சீனாக்காரனுக்கு செக் வெக்கணும்.


sundarsvpr
டிச 04, 2024 15:57

கூட்டு குடும்பம் என்ற சாசன விதி ஏற்பு என்றால் ஓய்வு வயதை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை. வருமானத்தை மன மனஒப்புதலுடன் பகிர்ந்துகொள்வதால் முதலில் விரயம் இருக்காது. பாச உணர்வினால் மன மகிழ்ச்சி கிடைக்கும். முன்காலத்தில் மரணம் அமைதியாய் நடைபெறும். இப்போது மருந்துகளை உண்டு மன அவைதைகளுடன் உயிரை பிடித்துக்கொண்டு வாழ்கிறோம். ஓய்வு வயதை ஏற்றுவது சரியில்லை.


Barakat Ali
டிச 04, 2024 14:46

எனக்கு எழுபத்தி மூணு ஆச்சு ..... சின்ன வயசுல ரொம்ப தப்பான விளையாட்டெல்லாம் அதிகமான விளையாண்டதால இப்போ ரொம்ப அவதி ஆயிருச்சு ..... அதனாலதான் வாரிசை எனக்கு உதவியாக நியமிச்சுட்டேன் .... வாரிசும் கத்துக்க வாய்ப்பு .... வாரிசு கிட்டே சுரண்டுற பொறுப்பை ஒப்படைச்சாச்சு .... 2026 ல விலகிருவேன் ....


Sidharth
டிச 04, 2024 16:05

வீட்ல மனையை கவனித்து கொள்ள நீரேவா இல்ல ஆள் வைத்தாகிவிட்டதா ?


Mettai* Tamil
டிச 04, 2024 16:38

சித்தார்த் , அவர் வீட்ல மனையை கவனித்து கொண்டே அறிவியல் ரீதியில் அரசியல் வேலைய பார்த்தவர் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை