உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பீஹார் பா.ஜ., வெற்றிக்கு எஸ்.ஐ.ஆரே காரணம்

 பீஹார் பா.ஜ., வெற்றிக்கு எஸ்.ஐ.ஆரே காரணம்

தமிழகத்தின் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சேர்த்து லட்சக்கணக்கான ஓட்டுச்சாவடிகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர்., பணிக்கென தனித்த ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான், அந்த பணிகள் தொய்வின்றி நடக்கும். அரசு ஊழியர்களை கொண்டு, எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணிகளை மேற்கொள்வது சரியல்ல. 'எஸ்.ஐ.ஆர்., பணி எங்களுக்கான கூடுதல் பணி; அரசுத் துறை பணி மற்றும் எஸ்.ஐ.ஆர்., பணி என இரு பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியவில்லை' என்று, அரசு ஊழியர்கள் செல்வது நுாறுக்கு நுாறு சதவீதம் சரியே. எஸ்.ஐ.ஆரால், ஒரு கோடி பேருக்கு அதிகமான பேருக்கு ஓட்டுரிமை இல்லாமல் போகும் என சீமான் கூறியுள்ளார். அதையும் விட கூடுதலான எண்ணிக்கையில் ஓட்டுகள் குறையும். பீஹாரில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆரே காரணம். - சீனிவாசன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை