உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 கோடி யூனிட்டை எட்டியது சூரியசக்தி மின் உற்பத்தி

5 கோடி யூனிட்டை எட்டியது சூரியசக்தி மின் உற்பத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி, எப்போதும் இல்லாத அளவாக நேற்று முன்தினம், 4.93 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. சூரியசக்தி மின் உற்பத் திக்கு, சூரியனின் வெப்பத்தை விட, ஒளியே முக்கியம். தமிழகத் தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரிய சக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான வானிலை நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தின் ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 10,600 மெகா வாட்டாக உள்ளது. இதிலிருந்து, மழை தவிர்த்த நாட்களில் தினமும் சராசரியாக, 3 கோடி - 4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த ஜூலை 5ம் தேதி, 4.85 கோடி யூனிட் கள் மின்சாரம் கிடைத்தது. இதுவே உச்ச அளவாக இருந்தது. நேற்று முன்தினம், எப்போதும் இல்லாத அளவாக, 4.9 3 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 08, 2025 11:39

இத்துணை மின்சாரத்தையும் பூரணமாக உபயோகித்தார்களா இல்லை காவேரி ஆற்று நீர் கடலுக்கு போவது போல இதனையும் பூமிக்குள் விட்டார்களா.


sivakumar
ஆக 08, 2025 08:32

வீடுகளுக்கு, நிறுவனங்களுக்கு மற்றும் அனைத்து வகையிலான உற்பத்தியும் சேர்ந்தே பொருந்தும்.


Mani . V
ஆக 08, 2025 04:03

தனியார்களை பல கோடிகளுக்கு அதிபதிகள் ஆக்கும் அரசுக்கு ஒரு ராயல் சல்யூட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை