உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விண்வெளிக்கு மனிதர்களை அடுத்தாண்டு அனுப்ப திட்டம்

விண்வெளிக்கு மனிதர்களை அடுத்தாண்டு அனுப்ப திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இளைஞர்களிடம் தொழில்நுட்ப ஆர்வத்தையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளன,'' என, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.சென்னையில் நேற்று நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், விண்வெளி, பாதுகாப்பு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து அவர் பேசியதாவது:'சந்திரயான் - 2' தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து, தொழில்நுட்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தோம். அதனால் தான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி அடைய முடிந்தது. உலகிலேயே இந்தியா தான், மிக குறைந்த செலவில் ராக்கெட் அனுப்புகிறது. ஹார்ட்வேர் பயன்பாட்டை குறைப்பதே இதற்கு காரணம்.'சந்திரயான் - 3' வெற்றி, இந்திய மக்களின் இதயங்களில் உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது. பிரதமர் மோடி கூறியது போல, சந்திரயான் - 3 வெற்றி அனைவருக்குமானது.இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இந்திய இளைஞர்களை தொழில்நுட்பம் நோக்கி திருப்பியுள்ளன.குறிப்பாக, சந்திரயான் வெற்றிக்குப் பின், விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகளை படிக்க, இளைஞர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கல்வித்துறையில் மட்டுமல்லாது, ஏராளமான தொழில் வாய்ப்புகளையும் இஸ்ரோவின் வெற்றி உருவாக்கியுள்ளது. விண்வெளி துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான சூழலை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலம், 2025ல் அனுப்பப்படும். இத்திட்டத்தில் மனித ரோபோ அனுப்பும், 'வியோமித்ரா' திட்டமும் அடங்கும்.குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இடம், சிறிய வகை ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப பொருத்தமானதாக இருக்கும்.அடிக்கல் நாட்டப்பட்டதும், இரண்டு ஆண்டுகளில் அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

g.s,rajan
ஜன 08, 2024 22:22

நமது அரசியல்வாதிகள் விண்வெளியையும் உருப்பட விடமாட்டார்கள் அதையும் நாசமாக்கிவிடுவார்கள்..... .


kannan
ஜன 08, 2024 14:59

இஸ்ரோவில் வேலை செய்பவர்கள் எல்லோரும் ரிசர்வேசனில் படித்தவர்கள். ஐஐடி யில் படித்தவர்கள் எத்தனைபேர் என்பதை அப்பரண்டீஸ் கண்டுபிடித்துப் போடவும்.


Sampath Kumar
ஜன 08, 2024 08:59

manusankalai maelae அனுப்புவது இருக்கட்டும் கீலே உள்ள மனுசனுக்களை நிம்மதியா மூச்சு வீட்டா ஏற்பாடு செய்வீர்களா உங்க ராக்கெட் விடும் புகையால் கற்று மாசு அதிகரித்து வருவதை நீங்க அறிவீர்களா உலக கழிப்பிடம் இல்லத்தை எத்தனையோ கிரம மக்கள் அவதி படுகிறார்கள் அதுக்கு ஏதாவது செஞ்சிக்கல போவியா பொய் ஆக வேண்டியதை முதல பாரு


முருகேசன்,சோளிங்கர்
ஜன 08, 2024 10:10

முதலில் அறிவாலயத்தில் இருந்து வெளியே வா நல்ல காற்றை சுவாசிக்கலாம்


Raa
ஜன 08, 2024 10:30

. கொத்தனாரிடம் தச்சு வேலை கொடுத்து வீடு கட்டி இருப்பர் போல.


Premanathan S
ஜன 08, 2024 08:52

அது பிறகு பார்க்கலாம். முதலில் பூமியில் இருப்பவர்களை நல்ல மனிதர்களாக இருக்க செய்ய வழி கண்டு பிடியுங்கள் விஞ்ஞானிகளே


வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஜன 08, 2024 10:12

உன்னை மாதிரி பொறாமை கொண்ட மனிதர்களை அழித்தாலே போதும்


veeramani
ஜன 08, 2024 08:50

எண்பதுகளில் துவங்கி பொன்விழா கண்டு வான் உச்சியை இந்தியர்களின் துணைகொண்டு தொட நிச்சயித்துள்ள இஸ்ரோ.. இந்திய அரசின் மேன்மைமிகு துறை. இந்தியர்களின் கடினஉழைப்பை, பெருமை, மதிப்பை, கௌரவத்தை மேற்கத்தியநாடுகளுக்கு உணரவைத்த துறை. இந்திய அரசின் விஞ்ஞானியாகிய நான், செட்டிநாட்டில் வேலைபார்த்தாலும், திருவனந்தபுரம், வால்லியாமலா சென்று சுமார் இருபத்திஐந்து வருடங்கள் இனைந்து வேலை செய்தது மனதிற்கு மகிழ்ச்சியாகவு, பெருமையாகவும் உள்ளது.


Bharathi
ஜன 08, 2024 08:31

Z Square???????? nilavukku arugile udane kudipuga ettrar pol veettu manaigal


நாஞ்சில் நாடோடி
ஜன 08, 2024 08:21

ஜெய் ஆஞ்சநேய...


Seshan Thirumaliruncholai
ஜன 08, 2024 08:13

அரசு கொடுக்கும் இலவச தொகையை தொழில் நுட்ப வளர்ச்சிக்கு கொடுக்கலாம். வசதி உள்ளவர்களும் இலவசத்தை பெறுகிறார்கள். கேட்டால் எங்கள் பணம் தானே என்ற ஏளனம். அரிதாரம் போட்ட நடிகர்கள் பின்னால் செல்லுங்கள். குற்றம் இல்லை. விஞ்ஞானிகள் பின்னால் செல்லவேண்டாம் . வாழ்த்தினால் போதும் உந்துதல் அதிகமாகும்.


Ramesh Sargam
ஜன 08, 2024 07:48

அருமை. ஒரே ஒரு வேண்டுதல்/விண்ணப்பம்: "பரிசோதனை அடிப்படையில் முதலில் ஒரு சில அரசியல்வாதிகளை அனுப்பவும்". அவர்கள் அங்கு சென்றடைந்தாலும் வெற்றிதான். திரும்பி வந்தாலும் வெற்றிதான். வராவிட்டாலும் பெரும் வெற்றிதான்.


தமிழ்செல்வன்
ஜன 08, 2024 09:05

நல்ல யோசனை


Raa
ஜன 08, 2024 10:32

. தேவை இல்லாத ஆணிகள் நிறைய உள்ளன இங்கே. தொலையட்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை