உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதிகள் தயாரிப்பு பொருட்களில் போலி பில் மோசடி; பெண் எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

கைதிகள் தயாரிப்பு பொருட்களில் போலி பில் மோசடி; பெண் எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரை சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்றதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரில், பெண் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bbt0e0up&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பொருட்களை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் போது கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாகவும், அரசு அலுவலகங்களில் குறைவான விலைக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.மேலும் போலி பில்கள், ஆவணங்கள் மூலம் பலகோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் பறந்தன. தொடர் புகார்களின் படி 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ரூ.1.63 கோடி முறைகேடு நடந்ததாக மதுரை சிறையில் எஸ்.பி.,யாக இருந்த ஊர்மிளா, பாளையங்கோட்டை ஏ.டி.எஸ்.பி., வசந்த கண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன், வியாபாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந் நிலையில், இந்த வழக்கில் எஸ்.பி. ஊர்மிளா (தற்போது புதுக்கோட்டை மத்திய சிறை எஸ்.பி.யாக உள்ளார்) வசந்த கண்ணன், தியாகராஜன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை டி.ஜி.பி., பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

अप्पावी
மார் 15, 2025 13:17

மேக்கப் போட்டி ரன்யா ராவ் மாதிரி இருப்பாங்க.


Kanns
மார் 15, 2025 11:27

Why Women are Given UnConstitutional GenderBiased Favours by Case/News/Vote / Power Hungry Criminals When they Equal Criminals


Rangarajan Cv
மார் 15, 2025 11:25

Shame on police for stealing money of prisoners work. How she can remain as police. Rather she should be imprisoned


ப.சாமி
மார் 15, 2025 09:46

ஆண்கள் மட்டும்தான் மோசடி செய்வார்களா? பெண்களுக்கும் மோசடி செய்ய தெரியும்.ஆண் பெண் சமம்


மணி
மார் 15, 2025 06:33

முழியே ஒரு மாதிரி இருக்கு


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 15, 2025 06:06

முகத்தை பார்த்தால் படித்து அதிகாரி ஆனவர் மாதிரி தெரியவில்லை....திராவிடியா கட்சிகளுக்கு ஜே போடும் சொர்ணக்கா மாதிரி இருக்கு


Bhakt
மார் 15, 2025 02:42

ஒரு கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.


Perumal Pillai
மார் 14, 2025 22:00

காலேஜ் ஸ்கூல் நிகழ்ச்சிகளில் இவர்களை chief கெஸ்ட் ஆக பேச அழைக்க வேண்டும் . நீதி, நேர்மை, தனி மனித ஒழுக்கம் , பண்பாடு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நாகரீகம் பற்றி பிட் இல்லாமல் மணி கணக்கில் பேசுவார்கள் .


Perumal Pillai
மார் 14, 2025 21:55

ஒரு SP செய்யக்கூடிய வேலையா இது ? கண் இல்லாத பிச்சைகாரரிடம் களவு செய்யும் நபர் எவ்வளவோ better .


अप्पावी
மார் 14, 2025 21:49

போலீஸ் திருட்டு முழி முழிக்கிது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை