உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கட்டண பிரச்னைக்கு தீர்வு காண மாநிலம் முழுதும் 5ல் சிறப்பு முகாம்

மின் கட்டண பிரச்னைக்கு தீர்வு காண மாநிலம் முழுதும் 5ல் சிறப்பு முகாம்

சென்னை:மின் கட்டணம், குறைபாடு உடைய மீட்டரை மாற்றுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாநிலம் முழுதும், அனைத்து செயற்பொறியாளர் அலுவலகங்களிலும், நாளை மறுதினம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மின் கட்டணம் குறித்து பெறப்படும் புகார்கள் மீது, மூன்று நாட்களில் தீர்வு காண, பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. தாமதமாக கணக்கெடுப்பதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும் அதிக கட்டணம் வருகிறது. இது தவிர, குறைபாடு உடைய மீட்டர்களை மாற்ற தாமதம் செய்வதாலும், அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. பாதிக்கப்படுவோர், வாரிய அலுவலகங்களிலும், மின் குறைதீர் கூட்டங்களிலும் புகார் அளித்தாலும் தீர்வு கிடைப்பதில்லை. இதனால், பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, சென்னையில் மார்ச் 26ல், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில், மின் கட்டணம், குறைபாடு உடைய மீட்டரை மாற்றுவது, மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாநிலம் முழுதும் அனைத்து செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு உட்பட்ட இடங்களில், நாளை மறுதினம் சிறப்பு முகாம்களை மின் வாரியம் நடத்துகிறது. மாநிலம் முழுதும் சிறப்பு முகாம் நடத்துவது இதுவே முதல் முறை. முகாம், காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும். முகாமில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, மூன்று நாட்களில் தீர்வு காண, பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குறைபாடு உடைய மீட்டர் குறித்து புகார் பெறப்பட்டால், மூன்று நாட்களுக்குள் புதிய மீட்டர் மாற்றித்தர வேண்டும். சேதமடைந்த மின் கம்பம் உள்ளிட்ட சாதனங்களை மாற்றுவது தொடர்பான புகாருக்கு, ஒரு வாரம்; மின்னழுத்த புகாருக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை