உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர்கள் கோரிக்கை பரிசீலிக்க சிறப்பு குழு

டாக்டர்கள் கோரிக்கை பரிசீலிக்க சிறப்பு குழு

சென்னை:அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய, மூன்று அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை அமல்படுத்த வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையங்களில், எம்.பி.பி.எஸ்., நிறைவு செய்த டாக்டர்களுக்கு ஊக்கப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, அரசு டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ககன்தீப்சிங் பேடி ஆகியோருடன், டாக்டர்கள் பேச்சு நடத்தினர். அதில், முதுநிலை மருத்துவ படிப்பை நிறைவு செய்த டாக்டர்களுக்கு சீரான ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.மேலும், சில கோரிக்கைகளை ஆய்வு செய்ய, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்குழுவில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர், பொது சுகாதாரத் துறை இயக்குனர், மருத்துவ சேவை மற்றும் ஊரக நலத் திட்ட இயக்குனர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, டாக்டர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை