உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிறிஸ்துமஸ் திருவிழாவில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் திருவிழாவில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

கிருஷ்ணகிரி: கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி, தேவாலயங்களில் நள்ளி-ரவு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.கிருஷ்ணகிரி, துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், கிறிஸ்-துமஸ் திருவிழாவையொட்டி, நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. திருத்தல பங்கு தந்தை அருள்ராஜ் தலைமையில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், 5,000க்கும் மேற்-பட்டவர்கள், கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும், தேவாலயத்தின் உள்புறமும், வெளிப்புறமும், இயேசு பாலகனின் பிறப்பை உணர்த்தும் வகையில், குடில்கள் அமைக்-கப்பட்டிருந்தது. தேவாலயத்தில், உலக நன்மைக்காகவும், உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், அன்பு சமாதானத்தில் திளைத்திடவும், குருக்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். அப்போது, பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை நிறைவில், அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்-துமஸ் பெரு விழாவையொட்டி, தேவாலயம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், நள்ளி-ரவு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி