உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள்

கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை:தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை - கன்னியாகுமரி உட்பட, ஐந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:  ↓சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 29, நவ., 5ம் தேதிகளில் இரவு 11:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:15 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். கன்னியாகுமரியில் இருந்து வரும் 30, நவ., 6ம் தேதிகளில் மதியம் 2:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் ↓சென்ட்ரலில் இருந்து, வரும் 30, நவ., 6ம் தேதிகளில் இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:20 மணிக்கு செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து, 31, நவ., 7ம் தேதிகளில் இரவு 7:30 புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:30 மணிக்கு சென்ட்ரல் வரும்  ↓சென்ட்ரலில் இருந்து, நவ., 2ம் தேதியன்று இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 4:00 மணிக்கு மங்களூரு செல்லும். மங்களூரில் இருந்து, நவ., 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:10 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் ↓தாம்பரத்தில் இருந்து, வரும் 29, நவ., 5, 12ம் தேதிகளில் நள்ளிரவு 12:35க்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் பகல் 12:15 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். கன்னியாகுமரியில் இருந்து, வரும் 29, நவ., 5, 12ம் தேதிகளில் மாலை 3:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு தாம்பரம் வரும் ↓கேரளா மாநிலம் கொச்சுவேலியில் இருந்து, வரும் நவ., 4ம் தேதி மாலை 6:05 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத, அந்த்யோதயா சிறப்பு ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக, மறுநாள் காலை 10:55 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்லும். எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து, வரும் நவ., 5ம் தேதி பகல் 12:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு கொச்சுவேலி செல்லும்.இந்த சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு, இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை