பா.ம.க., பிரச்னை விரைவில் சரியாகும் என்கிறார் ஸ்ரீகாந்தி
கடலுார்: பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள பிரச்னை விரைவில் சரியாகும் என, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி கூறினார். கடலுார் அருகே கண்ணாரப்பேட்டையில் பா.ம.க., செயல் தலைவர் ஸ்ரீகாந்தி அளித்த பேட்டி: பா.ம.க., செயல் தலைவராக எனக்கு பொறுப்பு வழங்கிய, கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு முழு பாதுகாப்பாக இருப்பேன். தற்போது சிலர் கட்சிக்கும், ராமதாசுக்கும் சடுகுடு விளையாட்டு காட்டி வருகின்றனர். அந்த பிரச்னை விரைவில் சரியாகும். சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் பா.ம.க., கூட்டணி அமைக்கும் என ராமதாஸ் விரைவில் அறிவிப்பார். மேலும் கட்சியை ஒன்றிணைக்கும் பணியை நான் தொடர்வேன். கட்சியில் உள்ள பிரச்னைகளை ராமதாஸ் விரைவில் சரி செய்வார். ஒழுக்கமான மற்றும் கட்சி வளர்ச்சி பற்றி பேசுபவர்கள், அதை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.