மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
ராமேஸ்வரம்: இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்கக்கோரி நாளை (பிப்.,24) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் பிப்.,16, 22ல் நான்கு மீனவர்களுக்கு தலா 6 மாத சிறை தண்டனையும், 3 மாதத்துக்கு முன்பு கைதான மீனவர் நம்புமுருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதில், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தை ரத்து செய்து, தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை முதல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தீர்மானத்தில் தெரிவித்தனர். கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா, சகாயம், எமிரேட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21