உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை தமிழகம் வருகிறார் சிருங்கேரி சங்கராச்சாரியார்

நாளை தமிழகம் வருகிறார் சிருங்கேரி சங்கராச்சாரியார்

சென்னை: ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகளின், 'விஜய யாத்ரா 2024 சென்னை' நாளை துவங்குகிறது.பெங்களூரில் இருந்து, நாளை இரவு காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்திற்கு வருகிறார். மறுநாள் காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், 28ல் சென்னை வருகிறார். அன்று முதல், நவம்பர் 13 வரை சென்னையில் தங்கி, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பின், திருப்பதி செல்ல உள்ளார்.ஸ்ரீசாரதா பீடத்தின், 36-வது பீடாதிபதியான ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சன்னிதானம், தன் சீடராக ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தை நியமித்துள்ளார். இவர், திருப்பதி தேவஸ்தான வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வர் சிவசுப்ரமணிய அவதானி -- சீதா நாகலட்சுமி தம்பதிக்கு, 1993 ஜூலை 24ல் பிறந்தவர்.இவரது பூர்வாசிரம பெயர் வேங்கடேச பிரசாத சர்மா. இவர் வேதத்தையும், சாஸ்திரங்களையும் முழுமையாக படித்தவர். 2015 ஜூன் 23ல் சன்னியாச தீட்சை அளிக்கப்பட்டு, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக உள்ளார். இவர் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.கேரள மாநிலம் காலடி கிராமத்தில் பிறந்த ஸ்ரீஆதிசங்கரர். அவரால் தோற்றுவிக்கப்பட்டது கர்நாடக மாநிலம் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம். சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்தியாவின் தென் மாநிலங்களை அன்னிய ஆட்சியில் இருந்து பாதுகாத்த விஜயநகர பேரரசு உருவாக காரணமான பீடம் சிருங்கேரி.

இந்த பீடத்தின், 12ம் குருவான ஸ்ரீவித்யாரண்யர் ஹரிஹரர், புக்கர்களுக்கு ஆசியளித்து விஜயநகர சாம்ராஜ்ஜியம் உருவாக வழிவகுத்தார். விஜயநகர பேரரசின் அரசர்கள் அனைவரும், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குருக்களை தங்களது ராஜகுருக்களாக ஏற்றனர். விஜயநகர பேரரசின் புகழ்பெற்ற அரசரான கிருஷ்ண தேவராயரின் குருவாக, ஸ்ரீசாரதா பீடத்தின், 19ம் குருவான ஸ்ரீ இரண்டாம் புருஷோத்தம பாரதீ சுவாமிகள் விளங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Lion Drsekar
அக் 25, 2024 14:06

ஹரஹர சங்கர ஜயஜய சங்கர , தப்பித்தவறி கூட பள்ளிகளுக்கோ கல்லூரிகளுக்கோ செல்லவேண்டாம், உங்கள் ஆசி வேண்டும் வந்தே மாதரம்


Ram Krishna
அக் 25, 2024 13:33

ஹர ஹர சங்கர ஜெய ஜெயசங்கர .....


Ramesh Sargam
அக் 25, 2024 13:00

ஜெய ஜெய சங்கர. ஹர ஹர சங்கர. சங்கரம் போற்றி.


தமிழ்வேள்
அக் 25, 2024 11:56

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத் குருவுக்கு சாஷ்டாங்க ப்ரணாமங்கள் ....ஜெய ஜெய சங்கரர்...ஹர ஹர சங்கர ...


Rasheel
அக் 25, 2024 11:39

மிக பழமையான சம்பிரதாயங்களை விட்டு கொடுக்காத நல்ல நிறுவனம். சிருங்கேரி மடம்.


Subramanian
அக் 25, 2024 10:38

பொழுது விடிந்தாலும்- சிருங்கேரி சென்றாலும் - இந்த ஏழையின் வாழ்வு உழைப்பினால் தான்.


M Ramachandran
அக் 25, 2024 10:04

திருட்டு கும்பல் கருப்பு கொடி காட்ட கூடும். அவர்களுக்கு பந்தோ பஸ்த்து தமிழக போலீசு கொடுக்கும்


karutthu kandhasamy
அக் 25, 2024 09:05

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிகள் திருச்சி மதுரை திருநெல்வேலி போன்ற வடமாவட்டங்களில் விஜயம் செய்யவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் சிருங்கேரிக்கு போய் தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகவே ஸ்வாமிகள் இதை ஏற்றுக்கொண்டு இங்கு விஜயம் செய்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம்


BALACHANDRAN
அக் 25, 2024 08:43

பகவான் சங்கல்பம்


RAVINDRAN.G
அக் 25, 2024 08:36

ஸ்ரீ குருப்யோ நமஹ


புதிய வீடியோ