உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும் 

மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும் 

கோவை: தமிழக அரசின் மாநில கல்வி கொள்கை குறித்து, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்ட அறிக்கை: ஜே.இ.இ.,நீட் போன்ற தேசிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழக மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்துடன், பிளஸ் 1 பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே, போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்களின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டது. இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டால், பெரும்பாலான பள்ளிகள் நேரடியாக பிளஸ் 2 வகுப்பு பாடங்களை கற்பிக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம், பொறியியல் மற்றும் பிற பட்டப்படிப்பு சேர்க்கைகள், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. பிளஸ் 1 பொதுத் தேர்வை நீக்குவது நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் வாய்ப்புகளை பாதிப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள தமிழக உயர்கல்வி தரத்தையும், கடுமையாக பாதிக்கும். இவ்வாறு, பாலகுருசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ethiraj
ஆக 10, 2025 18:39

He is correct


ramani
ஆக 10, 2025 17:11

திமுகவிற்கு தேவை கொத்தடிமைகள். மாணவர்களை பலி கொடுக்க முடிவு செய்து விட்டார்கள். ஏற்கனவே தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ள நிலையில் அதளபாதாளத்திற்கு மாணவர்களை தள்ளி விடும் மாடல் அரசு.


PANDIAN SWAMYNATHAN
ஆக 11, 2025 14:49

திரு ரமணி அவர்களே உங்கள் சங்கி தன் ஆலோசனை களை கல்வியில் பின்தங்கிய உங்களது எஜமானர்கள் ஆளும் மாநில க்களுக்கு வாரி வழங்குங்கள் அய்யா எங்கள் குழந்தை களின் எதிர்காலத்தை பா படிக்கும் நீட் கொண்டு வந்த நீங்கள் புத்தி சொல்லும் அளவிற்கு நாங்கள் இல்லை


Nujra
ஆக 10, 2025 12:32

Yes True. Informal education tem mixed with formal education. Teachers are teaching and students are not learning, hence educational institutions are become entertainment centres.


கூத்தாடி வாக்கியம்
ஆக 09, 2025 12:23

சார் நல்லது சொன்னா ஒருத்தனும் கேட்க மாட்டான். இங்கு கொத்தடிமை செய்ய ஒரு கூட்டம் உருவாக்க படுகிறது. அறை குறை அறிவோடு இருந்தால் தான் அடிமை அதிகமா கெடைப்பான்


சண்முகம்
ஆக 09, 2025 06:53

இவரது கருத்தை யாரேனும் கேட்கிறார்களா? ஐயோ பாவம்.


சமீபத்திய செய்தி