உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொருட்காட்சி நடத்த லஞ்சம்; அதிகாரிகளுக்கு சம்மன்

பொருட்காட்சி நடத்த லஞ்சம்; அதிகாரிகளுக்கு சம்மன்

சென்னை:: பொருட்காட்சிகள் நடத்த அனுமதி வழங்க, லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், மேலும் சில அதிகாரிகளுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.சென்னை, தலைமை செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை என்ற கட்டடத்தின், 10வது மாடியில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பொருட்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கும் பிரிவும் செயல்படுகிறது.இதில், உயர் நிலை கணக்கராக இருந்த அன்பரசு, அலுவலக உதவியாளர் பாலாஜி ஆகியோர், பொருட்காட்சி நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாக, 2023 செப்டம்பரில் மதுரையைச் சேர்ந்த மாணிக்கவாசம் என்பவரிடம், 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றை ஆய்வு செய்து, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த மேலும் சில அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

g.s,rajan
பிப் 18, 2024 22:05

இந்தியாவில் சட்ட விரோதமாக இருக்கும் லஞ்சத்தை சட்ட பூர்வமாக்குங்கள்,லஞ்சத்தை ஒழித்து விடலாம் .....


duruvasar
பிப் 18, 2024 15:48

15000 ரூபாய் லஞ்சமா ? இந்தமாதிரி ஆளுங்களை உடாதீங்க


Babu Bhopal
பிப் 18, 2024 10:20

Required your support for online petition: Take action on CMDA officers / officials for Mandatory Bribe for Building Plan Approval


Ramesh Sargam
பிப் 18, 2024 09:21

இப்ப எல்லாம் லஞ்சம் பெஞ்சுக்கு அடியில் யாரும் வாங்குவதில்லை. நேரடியாக பெஞ்சுக்கு மேலே வாங்குகிறார்கள்.


VENKATESAN
பிப் 18, 2024 09:12

இது எல்லா இடங்களிலும் நடக்கிறது இது என்ன புதியதாக நடந்தது போல செய்தி வருகிறது லஞ்சம் வாங்காத இடம் இருந்தால் அது தான் செய்தியாக வர வேண்டும்


ராமகிருஷ்ணன்
பிப் 18, 2024 06:39

நடப்பது விடியலின் ஆட்சி. லஞ்ச தொகை மிகவும் குறைவாக உள்ளது. விடியலின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.


Ramesh Sargam
பிப் 18, 2024 06:38

லஞ்சம் எல்லாம் நாங்கள் வாங்குவதில்லை. 'அன்பளிப்பு' தாருங்கள் என்று கேட்கிறோம். அதைப்போய் லஞ்சம் என்று கூறுவது ஒப்புக்கொள்ளமுடியாது, என்று திமுகவினர் கூறுவார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை