உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு பெருகுகிறது ஆதரவு: சஸ்பெண்ட் செய்து உத்தரவு

டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு பெருகுகிறது ஆதரவு: சஸ்பெண்ட் செய்து உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய, டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.கடந்த 1996ல் காவல் துறையில் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர், உளவுத்துறை, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு என, பல பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார்.ஐந்து ஆண்டுகளாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு, காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்துாரி, 63, கொல்லப்பட்டார்.இது தொடர்பாக, அதே மாவட்டத்தை சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் வளையாபதி, 65, அ.தி.மு.க., பிரமுகர் பிரபு, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களை போலீசார், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில் உள்ள பயன்பாடு இல்லாத காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்று, சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. இது பற்றி, சுந்தரேசன் விசாரித்து, போலீசார் சித்ரவதை செய்து இருப்பதை உறுதி செய்து, மனித உரிமை கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.இந்த அறிக்கை, டி.ஜி.பி., மற்றும் அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாருக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்ததால், 2024 அக்டோபரில் சுந்தரேசன் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போதே பிரச்னை எழுந்தது. மனித உரிமை கமிஷன் கட்டுப்பாட்டில் இருந்த சுந்தரேசன், ஒரு மாதத்திற்கு பின், மயிலாடுதுறைக்கு சென்று பணியில் சேர்ந்தார். சில தினங்களுக்கு முன், அவருக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட பொலிரோ வாகனம், மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின்படி பறிக்கப்பட்டு உள்ளது.வாகன பறிப்பு செயலில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசந்தர் அநாகரிகமாக நடந்து கொண்டார். இச்சம்பவத்தின் பின்னணியில், மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் உள்ளனர் என்றும், மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுந்தரேசன் சுமத்தினார். இதற்கு எஸ்.பி., ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், தஞ்சாவூர் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். சீருடை பணியாளர் விதிகளை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, சுந்தரேசனை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதற்கிடையே, காவல் துறையில் அதிகாரிகள் செய்யும் 'டார்ச்சர்' குறித்து, செய்தியாளர்களுக்கு சுந்தரேசன் பேட்டி அளித்ததால், அவருக்கு காவலர்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. அவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி., அலுவலகத்தில், தஞ்சை சரக டி.ஐ.ஜி., ஜியாஉல்ஹக் விசாரணை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

ராஜா
ஜூலை 20, 2025 21:18

காவல் துறையை கையாளதெரியாதவர்கள் கையில் இருப்பது ஒரு வீட்டு செல்ல மிருகம் கிட்ட தேங்காய் கிடைத்தது போல உள்ளது


BALU
ஜூலை 19, 2025 14:07

திருப்பூர் டு பல்லடம் வழி சின்னக்கரை, லட்சுமிநகர் ,ஆறுமுத்தாம்பாளையம், அறிவொளி நகர் -தொட்டிஅப்புச்சிக்கோயில் பேருந்து நிறுத்தம். எங்களுக்கு சரியான நேரத்தில் பேருந்து வருவதில்லை, சில நேரம் பேருந்து வருவதே இல்லை அதனால் எங்களுக்கு புதிய பேருந்து அல்லது சரியாக ஓடும் பேருந்து வேண்டும் என்று நாங்கள் பலமுறை திருப்பூர் ஆட்சியரிடம் மின்னஞ்சல் மூலமாக மனு கொடுத்து இருக்கிறோம். செய்தித்தாளில் எங்கள் குறையை சொல்லி இருக்கிறோம் அந்த செய்தியும் நாளிதழில் வந்தது. சென்ற வாரம் பேருந்து வந்தது அந்த பேருந்து ஆறுமுத்தாம்பாளையம் தாண்டி பேருந்து நின்றுவிட்டது,என்ன செய்வதுஎன்று தெரியாமல் மக்களாகிய நாங்கள் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,வேலைக்கு போகும் ஆண்கள் பெண்கள் தவித்துநின்றோம் இந்த செய்தியை மேலிடத்தில் பார்த்து இருப்பார்கள் இல்லையா இதுவரை ஒன்றும் செய்யவில்லை. அரசாங்க பேருந்து சரியான நேரத்தில் விடமுடியவில்லை, என்றால் எங்களுக்கு தனியார் பேருந்தை விட அனுமதிக்குமாறு மக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


Ganapathy
ஜூலை 19, 2025 13:15

இத்தனை களேபரத்திற்கு பிறகும் இது பத்தி திராவிட தொடைநடுங்கி வாயே தொறக்கல. என்ன பிறவியோ.


R.P.Anand
ஜூலை 19, 2025 12:56

துறை ரீதியான குற்றச்சாட்டு இருக்குன்னா நீ முன்னாடியே நீக்க வேண்டியது தான். அப்போ அது பொய். நிறைய குற்றச்சாட்டு அப்போ அது வரைக்கும் என்னா பண்ணி நீங்க.


Rajagopal Mohankumar
ஜூலை 19, 2025 10:49

நேர்மையான அதிகாரியை பணிசெய்யவிடாமல் தண்டிக்க நினைக்கும் அறுகதையற்ற உயரதிகாரிகளைதான் பதவி இடைநீக்கம் செய்யவேண்டும்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூலை 19, 2025 10:31

இவ்வாறு மீடியா டரையல் செய்வதை தான் நீதியரசர் வேல்முருகன் கடுமையாக சவுக்கு மற்றும் உங்களை போன்ற ஊடகங்களை கண்டித்தார். அவர் மீது பல துறை ரீதியான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிலிருந்து தப்பிக்க பொன் மாணிக்கவேல் யுக்தியை கடைபிடித்துள்ளார் ஊடக தர்மத்தை காப்பாற்றுங்கள்


R.P.Anand
ஜூலை 19, 2025 12:59

குற்றச்சாட்டு இருக்கு அப்டின்னா நடவடிக்கை தான் எடுக்கணும். அதைவிட்டு வண்டிய புடுங்கரது அதுல காத்த புடுங்கறது எதுக்கு.


தனலட்சுமி ஊட்டி
ஜூலை 19, 2025 09:09

உயர் அதிகாரிகள் 99% பேர் தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கீழ் அதிகாரிகளை அடிமைகளாக நடத்துகின்றனர். குறிப்பாக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் மிகவும் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கேவலமாக நடத்தி வருகிறார்கள். துறை தலைவர்களாக உள்ளவர்கள் அப்போதைய உள்ள ஆளும் கட்சிக்கு விசுவாசிகளாக காட்டிக்கொண்டு அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. குறிப்பாக சில மாவட்ட நிலை அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு மாநில தலைமை அதிகாரிகளை மிரட்டுவதும் உண்டு. அடிக்கடி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு வரும் கீழ் நிலை அதிகாரிகள் பாவப்பட்ட வர்கள் தான். அவர்கள் யாருக்காக இந்த செயலைச் செய்கிறார்கள் என்பதை தடுக்க முயற்சிப்பது இல்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 19, 2025 08:45

தற்போது இந்தத்துறை தினமும் சந்தி சிரிப்பது ஏன் ? இரும்புக்கரத்தை வைத்துள்ளனர் என்ன செய்கிறார் ?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 19, 2025 10:06

இரும்பு கரத்தை வைத்துதான் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார் ..எனினும் டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு பெருகுகிறது ஆதரவு .. .முதல்வர் சிறப்பாக ஆட்சிசெய்வதை உலகநாடுகள் செய்த சாதியாக இருக்கலாம் .. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியை டி.எஸ்.பி., சுந்தரேசன் குறைசொல்வதா ?


பெரிய குத்தூசி
ஜூலை 19, 2025 08:40

கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் பற்றி ஏற்கனவே நிறைய இங்கே எழியுள்ளேன். தமிழகத்தில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, காவல் அதிகாரிகள் பழிவாங்கப்படுவதற்கு இவன் தான் எல்லாம் காரணம். ஒரிஜினல் டிஜிபி சங்கர் ஜிவால் சும்மா டம்மி. கூடுதல் டிஜிபி டேவிட்சன் அமெரிக்கா கிறிஸ்துவ மிழினரி ஆதரவு பெற்றுள்ள போலீஸ் அதிகாரி. இவன் ஒரு அமெரிக்க கைப்பாவை. அடிக்கடி சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரை சந்திப்பவன். நம்முடைய வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கி கொண்டு அமெரிக்கா கைக்கூலியாக வும், கிறிஸ்துவ மிழினரிகளுக்கு பல்லக்கு தூக்குபவராக தமிழக முதல்வர் ஆசியுடன் உலாவருபவர். கூடுதல் டிஜிபி டேவிட்சன் அலுவலகம் திமுக IT விங் அலுவலகத்தில் உள்ளது. கூடுதல் டிஜிபி டேவிட்சன்95 சதவிகிதம் திமுக IT விங் அணியுடன் பணியாற்றுபவன். நாட்டுப்பற்றுடன் சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டால் உடனே அவர்களை கைது செய்ய ஆணை இடுவது இவன்தான். இந்த கூடுதல் டிஜிபி டேவிட்சன் மதுரையில் கமிஷனராக இருந்தபோது 200 க்கு மேற்பட்ட போலி பாஸ்போர்ட் வழக்கில் உதவி சிக்கியவர் இந்த கூடுதல் டிஜிபி டேவிட்சன். இவனை போலீஸ் துறையில் வைத்திருப்பது பொதுமக்களுக்கு ஆபத்தானது. மத்திய உள்துறை நடவடிக்கை எடுத்து இவனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.


Kalyanaraman
ஜூலை 19, 2025 08:33

நேர்மைக்கும் திமுகவுக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஏற்கனவே நடந்த பாலியல் அத்துமீறல், போதை மருந்து கடத்தல் - விற்றல், கள்ளச்சாராயம், நில அபகரிப்பு, மணல் அள்ளுதல், ஏரியை ஆக்கிரமித்தல், இப்படி திமுகவுக்கு மிகவும் சம்பந்தமான பல விஷயங்கள் உள்ளது. நேர்மையான அதிகாரிகள் நூலகம், மியூசியம் போன்று காசு பார்க்க முடியாத இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.


மனிதன்
ஜூலை 19, 2025 14:44

நேர்மைக்கும் பாஜகவிற்கும் என்ன சம்பந்தம்??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை