உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரிகையாளர் பெலிக்ஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

பத்திரிகையாளர் பெலிக்ஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிரான வழக்குகள் மீது விசாரணை நடத்த தமிழக போலீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 'யு - டியூபர்' சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக, தமிழக அரசுக்கு எதிராக பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு உச்ச நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி பர்த்திவாலா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெலிக்ஸ் ஜெரால்ட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. அப்படியிருக்கையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, தமிழக போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 'அது மட்டுமில்லாமல், இதே விவகாரத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிராக புதிதாக ஆறு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது. எனவே, இவற்றிற்கு தடைவிதிக்க வேண்டும்' என, வாதங்களை முன் வைத்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பெலிக்ஸ் ஜெரால்டு தொடர்ந்துள்ள மனு மீது, தமிழக போலீஸ் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததுடன், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய வழக்குகள் மீதான விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். --டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ