உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல்: அரசாணை வெளியீடு

முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல்: அரசாணை வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சத்துணவு திட்டத்தின்கீழ், முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டம் அமலில் உள்ளது. 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 43,131 சத்துணவு மையங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த நிலையில், முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும். இதற்காக ரூ.4.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களிலும் வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜூன் 18, 2024 21:11

இனிப்பு பொங்கல் வழங்கிட ஒரு நூறு கோடி ஒதுக்கிடலாமா தலைவரே....?


V RAMASWAMY
ஜூன் 18, 2024 19:53

முக்கிய தலைவர்கள் என்று சொல்வது, பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போன்றவர்கள் தானே?


ஆரூர் ரங்
ஜூன் 18, 2024 18:58

பொங்கல் வெல்லத்தின் உருகு நிலை MELTING POINT ஐ சோதித்த பின்பே பயன்படுத்த வேண்டும். இப்படிக்கு சீப்பு சரவணன் திமுக.


Rajah
ஜூன் 18, 2024 18:52

முக்கிய பிரமுகர்கள் என்றால் யார் என்ற பட்டியல் தர முடியுமா?பாபர் அசாம், வன்னி அரசு, திருமா போன்ற பிரமுகர்களும் பட்டியலில் இருப்பார்கள் என்று எம்புகின்றோம்.


Duruvesan
ஜூன் 18, 2024 17:09

முக்கிய தலைவர்கள்.... என்னோட உன்னோட நம்மோட காசுல, ஓட்டு அல்லி போடும்


Veeraputhiran Balasubramoniam
ஜூன் 18, 2024 17:08

முக்கிய தலைவர்கள் ராபர்ட் கிளைவ் , ஜாக்சன் துர , எட்டப்பன், பாபர், அக்பர், ஷாஜஹான், கஜினி முகமது, கோரி முகமது காரல் மார்ஸ், ஸ்டாலின் , முசோலினி ..... அப்பா 366 நாளும் பாயசம் தான்


Swaminathan Nath
ஜூன் 18, 2024 16:33

குண்டும் குழியுமாக இருக்கும் ரோடுகளை சரி செய்ய பணம் இல்லை, இனிப்பு பொங்கல் கு நிதி ஒதுக்கீடு, இப்பொது சாப்பாட்டுக்கு இல்லாமல் யாரும் இல்லை, நல்ல கல்வி கொடுங்கள், தமிழக மாணவர்கள் சாப்பாடு கேட்கவில்லை,


தமிழ்வேள்
ஜூன் 18, 2024 16:15

ஏன் ? டாஸ்மாக்கில் விற்கப்படும் சரக்கோடு , பவுடர் பொட்டலமும் இலவச இணைப்பாக , திருவிழா போனஸ் ஆக தரலாமே ? சின்னவருக்கும் ஒரு வியாபாரம் ஆனது போல இருக்கும் தானே ?


vasu
ஜூன் 18, 2024 15:58

தலைவர்கள் கருணாநிதி பெரியார் அண்ணாதுரை


Svs Yaadum oore
ஜூன் 18, 2024 15:54

முக்கிய தலைவர்கள் என்றால் அவர்கள் யார் ??.....விடியலுக்கு தலைவர் என்றாலே ராமசாமி தான் ....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை