உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோப் கார் திட்டத்திற்காக உத்தராகண்ட் அரசுடன் சுவிஸ் நிறுவனம் ஒப்பந்தம்

ரோப் கார் திட்டத்திற்காக உத்தராகண்ட் அரசுடன் சுவிஸ் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை: உத்தரகாண்டில், ரிஷிகேஷ் முதல் குஞ்சபுரி வரை, 'ரோப் கார்' அமைக்க, அம்மாநில அரசு மற்றும் சுவிட்சர்லாந்தின், 'பார்தோலெட்' நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் ஆன்மிகம், சுற்றுலா துறையை மேம்படுத்த, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர் சத்பால் மகாராஜ் வழிகாட்டுதலின் கீழ், தபோவனம் ரிஷிகேஷ் முதல் குஞ்சபுரி கோவில் வரை, ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த, உத்தராகண்ட் சுற்றுலா வாரியம் முன்வந்துள்ளது.அதற்காக, சுவிட்சர்லாந்தின் ரோப் கார் உற்பத்தியாளரான பார்தோலெட் நிறுவனம் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டம், உத்தராகண்டின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இருக்கும். குஞ்சபுரி கோவில் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாகும். ரோப் கார் திட்டம் வாயிலாக, பயண நேரம் குறைவதுடன், சுற்றுலா பயணியர் பாதுகாப்பும் அதிகரிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ