| ADDED : ஆக 24, 2011 12:27 AM
திண்டுக்கல் : ஊராட்சி தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு புதிய சின்னங்கள் அறிவிக்கப்பட உள்ளன. உள்ளாட்சி தேர்தல் அக்டோபரில் நடைபெறவுள்ளது. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு, சென்ற முறை பயன்படுத்திய வில் அம்பு, பல்பு உள்ளிட்ட சின்னங்கள், இம்முறை தவிர்க்கப்பட உள்ளன. புதிய சின்னங்கள் ஒதுக்கப்படும். சென்ற தேர்தலில் பொது சின்னங்கள் அடங்கிய ஓட்டுச்சீட்டுகள், தற்போதும் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதை முற்றிலுமாக அழிக்க மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. புதிதாக பொது சின்னங்கள், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், வெளியிடப்படும். மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சின்னங்களே பயன்படுத்தப்படும்.