உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தையல் கூலி ரூ.400 போக்குவரத்து ஊழியர் வேதனை

தையல் கூலி ரூ.400 போக்குவரத்து ஊழியர் வேதனை

ராமநாதபுரம்:-அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு சீருடை தையல் கூலியாக ஆண்டுக்கு ரூ.400 மட்டுமே வழங்குவதாக வேதனை தெரிவித்தனர்.தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குஆண்டுக்கு இரு சீருடைகளுக்கு தையல் கூலிக்கான தொகை அவர்கள் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படுகிறது. இதற்காக தற்போது ரூ.400 மட்டுமே வழங்கப்படுகிறது.வெளியில் ஒரு பேன்ட் தையல் கூலி மட்டுமே ரூ.400, சட்டைக்கு குறைந்த பட்சம் ரூ.300 செலவாகிறது. அதன்படி பார்த்தால் குறைந்தது 2 பேன்ட், 2 சட்டைக்கு தையல் கூலியாக ரூ.1400 ஆகிறது. ஆனால் ரூ.400 மட்டுமே வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் வேதனையடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை