மேலும் செய்திகள்
மன அழுத்தம் போக்க போலீசாருக்கு யோகா
27-Oct-2024
சென்னை:சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனமும், அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலையும் இணைந்து நடத்திய ஆய்வில், தீவிர உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், விளையாட்டு வீராங்கனையர் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, அமெரிக்கா மின்னசோட்டா பல்கலை பேராசிரியர் மண்டா கெல்லர், சென்னை ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் நினிதா ஆகியோர் கூறியதாவது:கருவுறுதல், முகப்பருக்கள், மாதவிடாய் பிடிப்புகள், கருப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றை தடுக்க, பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்கின்றனர். விளையாட்டு வீராங்கனையரை பொறுத்தவரை, 70 சதவீதம் பேர் ஏதோ ஒரு கால கட்டத்தில், இத்தகைய மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கும், விளையாட்டு வீராங்கனையருக்கும் அவை எதிர்விளைவுகளை ஏற்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. கருத்தடை மாத்திரை பயன்பாட்டால், அவர்களுக்கு ரத்த அழுத்தம் மிகையாக காணப்படுகிறது.அதேநேரம், 20 முதல் 22 வயதுடைய இளம்பெண்கள், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினாலும், அவர்கள் குறைவாக உடற்பயிற்சி செய்தால், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுவதில்லை. தீவிர உடற்பயிற்சியின் போது ஏற்படும் ரத்த அழுத்தம், ஆயுள் முழுதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு, 50 வயதாகும் போது, கருப்பையில் ஹார்மோன் உற்பத்தி நின்று விடும். அப்போதிருந்து, மாதவிடாய் சுழற்சி நிகழாது. மாதவிடாய் நிறுத்த காலத்துக்கு பின், பெண்களுக்கு இதயம் மற்றும் ரத்தநாளங்கள் சார்ந்த பாதிப்புகள் அதிகரிக்கின்றன. அந்த பாதிப்புகளுக்கு உடற்பயிற்சியின் போது ஏற்படும் ரத்த அழுத்தமும் ஒரு காரணியா என்பதை அறிவதற்கு, அடுத்தகட்ட ஆய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
27-Oct-2024