உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தியது யார்; தேடிக் கொண்டே இருக்கிறது தாம்பரம் போலீஸ்!

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தியது யார்; தேடிக் கொண்டே இருக்கிறது தாம்பரம் போலீஸ்!

சென்னை: தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய கும்பலை தேடி வருவதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர். காரில் மோதியதாக வெளியான தகவலுக்கு, சம்பந்தப்பட்ட பெண்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.சென்னை அடுத்த, முட்டுக்காடு பாலம் அருகே ஜன.25ம் தேதி இரவில் பெண்கள் பயணித்த கார் ஒன்றை, 2 கார்களில் வந்த வாலிபர்கள் துரத்தியுள்ளனர். அதில் ஒரு காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டு இருந்திருக்கிறது. இதைக்கண்ட பெண்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் பயந்து போய், பீதியில் அலறிய பெண்கள் தாங்கள் வந்த காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். பின்னால் 2 கார்களில் அதிவேகத்தில் துரத்திக் கொண்டு வந்த வாலிபர்கள், முந்திச்சென்று சாலையை மறித்துள்ளனர். காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்த போதும், விடாமல் துரத்தி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பயந்து போய் பெண்கள் காரை நிறுத்த, அவர்களை நோக்கி வேகமாக வந்த வாலிபர்கள், கார் கண்ணாடியை ஆவேசமாக தட்டி மிரட்டியுள்ளனர்.காரில் இருந்த பெண்களில் ஒருவர், தமது மொபைல்போனில் நடந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அவர்கள் பயத்தில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்யும்படி கூறும் உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ இணையதளங்களில் வெகு வேகமாக பரவிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 'காரில் தி.மு.க., கொடி கட்டியிருப்பது, குற்றம் செய்வதற்கான லைசென்ஸா' என்றும் கேள்வி எழுந்தது.நடந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் கானாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளார். காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல், தங்களின் வீடு வரை பின்தொடர்ந்து வந்து பயமுறுத்தியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதனிடையே, பெண்கள் வந்த கார், வாலிபர்களின் காரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதால் தான், துரத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த பெண், 'நாங்கள் எந்த காரையும் இடிக்கவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும்', எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகளை கைது செய்யவும், அவர்களின் கார்களை பறிமுதல் பண்ணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர். ஈ.சி.ஆரில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

வாய்மையே வெல்லும்
ஜன 30, 2025 22:52

மேடைக்கு மேடை பொய்பேசி சமூக நீதி காத்த மாடல் அரசு வாழ்க என எவனாவது கம்பு சுத்தினீங்க என்றால் உங்களைவிட குள்ளநரி யாராகவும் இருக்கமுடியாது என்பதை ஆணி தனமாக சொல்லி உங்களுக்கு ஊசிப்போன மசால்வடை பார்சல் அனுப்பி வைப்பேன் .


அப்பாராம்
ஜன 30, 2025 13:18

காரில் சென்ற அந்த பெண்கள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டுரலாமே. நல்ல பிரமோஷனும், அண்ணா மெடலும்.கிடைக்க வாய்ப்பு.


Venkatesan Ramasamay
ஜன 30, 2025 12:44

நேற்று ... சார், இன்று ....கார் .... நாளை ... யார்...


Karthik
ஜன 30, 2025 12:18

நேற்று வரை " யார் அந்த சார் ?". இன்று முதல் " யாருது அந்த கார்? " அந்த காரையும், சாரையும் கண்டுபிடிப்பார் யாரோ? தொடரும் விடை தெரியா கேள்விகள்...


RAJAKUMAR PT
ஜன 30, 2025 10:53

கிடைக்க மாட்டார்கள்


Karthik
ஜன 30, 2025 10:53

ஒரு சொலவடை நினைவுக்கு வருது - ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதைதான்


Samy Chinnathambi
ஜன 30, 2025 06:36

அந்த "சாரின்" விழுதுகளான சேகரன்கள் கட்சி முழுவதும் நிரம்பி வழிகிறது.. தலைவனின் செயல்களை சரியாக பின்பற்றும் தொண்டர்கள்..கஞ்சா திருட்டு மாடல் அரசின் லட்சணம்..


D.Ambujavalli
ஜன 30, 2025 05:39

கேட்டால், பெண்களுக்கு அந்த நேரத்தில் எதற்காகக் காரில் செல்லவேண்டும்? என்று அவர்களையே குற்றம் கூற ஒரு கூட்டம் கிளம்பும் சாரைக்கண்டுபிக்க ஒரு மாமாங்கம் ஆகும் பிறகு கொடிகட்டிப் பறந்த காரையும், உள்ளேயிருந்த ‘சாறுகளையும்’ தேடிப்பிடிக்க இன்னொரு மாமாங்கம் ஆகும் முதல்வர் வழக்கம்போல், தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது என்று அறிக்கை விட்டுவிட்டு, எந்தப் பள்ளிக்கொடத்துக்காவது போய் குழந்தைகள் ‘அப்பா’ என்று அழைப்பதை ரசித்துக் கும்மாளமிடுவார்


நிக்கோல்தாம்சன்
ஜன 30, 2025 05:14

இனி அந்த கட்சி கொடி கட்டியிருக்கும் கார்களை எரித்து விடும்படி பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் கேட்டுகொள்ளப்போகிறார் , கொள்ளையர்களோடு கூட்டு வைத்து அரசாளும் ஒரு அரசனை பற்றிய காமெடி படம் இப்போது நினைவுக்கு வருகிறது , சொல்புத்தி முதல்வர் திருந்துவாரா


ராஜாராம்,நத்தம்
ஜன 30, 2025 07:11

யாருடையது அந்த கார்? அந்த காரில் இருந்த சார் யார்? விளக்குமா தமிழக காவல்துறை?


பாலா
ஜன 30, 2025 03:18

திருட்டுத் தெலுங்குச் சுடாலினை மிசாவில் கைது என்று கதை அளப்பான்கன் திராவிடியன்கள் ஆனால் அவர் கைது செய்யப்பட்டது ....


சமீபத்திய செய்தி